ஹோம் /மதுரை /

இது பைக்கா? காரா? லோடு ஆட்டோவா? குறைந்த விலையில் பைக்கை காராக மாற்றிய மதுரை மாற்றுத்திறனாளி..

இது பைக்கா? காரா? லோடு ஆட்டோவா? குறைந்த விலையில் பைக்கை காராக மாற்றிய மதுரை மாற்றுத்திறனாளி..

மதுரை

மதுரை

Madurai Bike Modification | மதுரை கைத்தறி நகர் பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நான்கு சக்கரம் கொண்ட வாகனமாக மாற்றி வடிவமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை கைத்தறி நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தனது தொழிலுக்கும், சொந்த உபயோகத்துக்கும் பயனுள்ளதாக மாற்றும் வகையில் இருசக்கர வாகனத்தை  நான்கு சக்கரமாக மாடிஃபிகேஷன் செய்து மாற்றியமைத்துள்ளார்.

மதுரை கைத்தறி நகர் பகுதியில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளொயான சரவணன். இவர் தனது  மனைவி பத்மாவதி, மகன் யோகேஷ், மற்றும்  மாற்றுத்திறனாளி மகள் ஷாலினி ஆகியொருடன் வசித்து வருகிறார்.

இவர் குடிசை தொழிலாக பிளாஸ்டிக் பம்பரம், பைப் ஆகிய பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் தினமும் பம்பரம் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பதற்கான மூல பொருட்களை வாங்கி அப்பொருட்களை ஏற்றி செல்வதற்காகவும், மாற்றுத்திறனாளியாக விளங்கும் தனது மகள் மற்றும் அவரது மனைவியை வெளியில் அழைத்து சென்று வருவதற்காகவும் தனது டி.வி.எஸ் இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனமாக மாற்றி அதில் மூன்று பேர் பயணிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார்.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

இது குறித்து சரவணண் பேசுகையில், “ 16,000 ரூபாய் கொடுத்து இந்த இருசக்கர வாகனத்தை "செகண்ட் ஹேன்ட்" -ல் வாங்கியதாகவும் தானும் ஒரு மாற்றுத்திறனாளி, தனது மகளும் ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் பயணிக்க முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளி சரவணன்

எனவே எங்களின் பயண பாதுகாப்பு கருதியும், தினமும் தொழிலுக்கான மூலப்பொருட்களை 40 முதல் 50 கிலோ வரை ஏற்றி 40 கிலோ மீட்டர் வரை சென்றுவர இந்த இருசக்கர வாகனத்தை மேலும் ஒரு இருபதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து மூன்று நபர்கள் அமரும் வாகனமாக மாற்றியதாகவும் கூறினார்.

மேலும் படிக்க:  திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

மேலும் தனது வீட்டில் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து வசித்து வருவதாகவும். சினிமா, கோயில் என எங்கு சென்றாலும் குடும்பத்தில் அனைவரையும் அழைத்து கொண்டு தான் செல்வேன் எனவே நால்வரும் வெளியில் செல்வதற்கு கார் வாங்கும் அளவிற்கு என்னிடம் பொருளாதாரம் இல்லை... ஆகவே இந்த வாகனம் எங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பதாகவும் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai