முகப்பு /மதுரை /

மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படை அணிகளுக்கு இடையே கபடி போட்டி..!

மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படை அணிகளுக்கு இடையே கபடி போட்டி..!

X
மதுரையில்

மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படை அணிகளுக்கிடையே கபடி போட்டி..

Madurai News | ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான 31வது கபடி போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம் ஆகிய ரயில்வே கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் எல்ஐசி நகர் பகுதியில் இருக்கக்கூடிய ரெட் பீல்டு மைதானத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராக மூத்த கோட்ட வர்த்தக மேலாளர் ரதிபிரியாவும், மூத்த கோட்ட இயந்திரப் பொறியாளர் சதீஷ் சரவணனும், கோட்டா ஊழியர் நல அதிகாரி சரவணன், உதவி ஆணையராக அன்பரசு மற்றும் சுபாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கபடி போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம் ஆகிய ரயில்வே கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் போட்டியில் பங்கேற்றனர். முதலாவது போட்டியில் சென்னை மற்றும் மதுரை அணிகள் மோதின. இந்த போட்டியில் மதுரை அணி 33 பள்ளிகளும் சென்னை அணி 23 புள்ளிகளும் பெற்றன. மதுரை அணி 13 புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இன்று காலையில் இரண்டு அரை இறுதி போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மாலையில் நடக்கவிருக்கும் நிறைவு விழாவில் மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் கலந்துகொண்டு இறுதிப் போட்டியை கண்டுகளித்து பரிசுகளை வழங்க உள்ளார்.

First published:

Tags: Kabaddi, Local News, Madurai