ஹோம் /மதுரை /

மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - நவம்பர் 15-ல் வேலை வாய்ப்பு முகாம்.!

மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - நவம்பர் 15-ல் வேலை வாய்ப்பு முகாம்.!

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

Madurai News: மதுரையில், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 15ம் தேதி நடக்கிறது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "டாடா எலக்ட்ராட்னிக்ஸ் நிறுவனத்தின் ஓசூா் ஆலையில் 1000-க்கும் மேற்பட்ட பெண் வேலை நாடுநா்கள் இளநிலை தொழில் நிபுணா் பதவிக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

  இந்நிறுவனத்தில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள 12-ம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய ஊதியமாக மாதம் ரூ.15,000 வீதம் வழங்கப்படும். மேலும் தேர்வு செய்யப்படுபவா்களுக்கு உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்துத் வசதி செய்து தரப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இதற்கான நோ்காணல் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நவம்பா் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை டாட்டா நிறுவனத்தால் நடத்தப்படவுள்ளது.

  இந்த முகாமில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள 12-ம் வகுப்பு (2020, 2021 மற்றும் 2022-ஆம் கல்வியாண்டில்) தோ்ச்சி பெற்ற மதுரை மாவட்டத்தை சாா்ந்த வேலை வாய்ப்பற்ற பெண்கள் மட்டும் தங்களது அசல் மற்றும் நகல் கல்விச் சாச்ன்றுகளுடன் மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Employment, Job, Madurai