முகப்பு /செய்தி /மதுரை / ஜல்லிக்கட்டு நடத்தத் தடை... எச்சரிக்கை கொடுத்த நீதிமன்றம்..!

ஜல்லிக்கட்டு நடத்தத் தடை... எச்சரிக்கை கொடுத்த நீதிமன்றம்..!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் கிராமங்களில் நிகழ்ச்சியின் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு நடத்த அனுமதிக்கோரி மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த ஆண்டு அரசு பட்டியலில் இல்லாத கிராமங்களில் பாரம்பரியம் கருதி, ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிகளை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கினர்.

Also Read : மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. சித்திரை பொருட்காட்சிக்கு தயராகும் தமுக்கம் மைதானம்!

அப்படி அனுமதி பெற்று இந்த ஆண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறுதல் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்னை ஏற்பட்டால், அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

First published:

Tags: Jallikattu, Madras High court, Madurai