முகப்பு /மதுரை /

மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை குஷிப்படுத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை குஷிப்படுத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

X
பட்டாசு

பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

Madurai Jallikattu : மதுரை தமுக்கம் மைதானத்தில் மாடுபிடி வீரர் நலச்சங்கம் மற்றும் மாடு பிடி வீரர் மற்றும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் இணைந்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான பொங்கல் திருநாள் அன்று தமிழகத்தில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விலங்கு நல அமைப்பான பீட்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிருக்கு 2014ம் ஆண்டு தடை விதித்தது உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என அனைவரும் திரண்டு முதல் முதலாக மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தை தொடங்கினர். பின்பு சென்னை மெரினா வரை போராட்டம் நடைபெற்று இறுதியில் வெற்றியை கண்டது.

இந்நிலையில் விலங்கு நல அமைப்பு பீட்டா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பானது தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பை கொண்டாடும் வகையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாடுபிடி வீரர் நலச்சங்கம் மற்றும் மாடு பிடி வீரர் மற்றும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் இணைந்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

இதையும் படிங்க : 30 ரூபாயில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம்..! தென்காசியில் ஒரு நாள் ட்ரிப்புக்கு சூப்பர் ஸ்பாட்..!

இதுகுறித்து மாடு பிடி வீரர் நல சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாடுபிடி வீரர்கள் கூறும்போது, “பல போராட்டங்களை கடந்து இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது அதனால் தான் எந்த இடத்தில் முதன் முதலாக மாணவ மாணவிகள் ஜல்லிக்கட்டிற்காக குரல் கொடுத்தார்களோ அதே இடத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடும் வகையில் கொட்டடித்து வெடி வெடித்து இனிப்புகளையும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம் என்றும்,

நான் முதலில் மாடுபிடி வீரராக இருந்தேன் தற்பொழுது ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றேன் இப்பொழுது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஏனென்றால் மதுரை என்றாலே வீரம் தான் மற்ற விளையாட்டை போல் இல்லை ஜல்லிக்கட்டு இதில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை எனினும் இந்த விளையாட்டானது பாரம்பரியம் மற்றும் எங்களது பெருமை ஆனால் இதனை பீட்டா நிறுவனம் எங்கள் பெருமையை குலைக்க நினைத்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளித்ததால் எங்களின் பாரம்பரியம் காக்கப்பட்டது. நாட்டு மாடுகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது இதனால் மாடுபிடி வீரராய் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இருக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ஏனென்றால் இன்று ஒரே நாளில் ஜல்லிக்கட்டு இருக்கு தடையின்றி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கும் அந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான மைதான அமைக்கப்படும் என்ற இரு செய்திகள் மாடுபிடி வீரராகிய எங்களுக்கு மிகவும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆகையால் இத்தீர்ப்பு வழங்கிய மத்திய மாநில அரசிற்கும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கூறினார்.

First published:

Tags: Jallikattu, Local News, Madurai