முகப்பு /மதுரை /

ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவிக்கும் மாடுபிடி வீரர் ஜெய்ஹிந்த்புரம் EB விஜய்.. இவரை ஞாபகம் இருக்கா?

ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவிக்கும் மாடுபிடி வீரர் ஜெய்ஹிந்த்புரம் EB விஜய்.. இவரை ஞாபகம் இருக்கா?

X
மாடு

மாடு பிடி வீரர் விஜய்

Madurai Jallikattu | இந்த ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக முதலமைச்சர் சார்பாக வழங்கப்பட்ட காரை தட்டிச் சென்றார் விஜய். நான்காம் சுற்றிலே சுமார் 15 காளைகளை பிடித்து இறுதிச்சுற்றில் மொத்தமாக 28 காளைகளை அடக்கினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் ஒவ்வோர் ஆண்டும் வெகுவிமர்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதில் முதல் போட்டியான அவனியாபுரத்தில் சுமார் 28 ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியவர் ஜல்லிக்கட்டு வீரர் விஜய். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்கி வருகிறார்.

2020 மற்றும் 2021 இல் அவனியாபுரத்தில் இரண்டு பைக்குகளையும் முதல் பரிசாக தட்டிச் சென்றார். பிறகு 2022 இல் இவருக்கு காலில் ஏற்பட்ட காயங்களால் இவரால் அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த ஆண்டுதான் முதன் முதலில் ஜல்லிக்கட்டு காரை பரிசாக அறிவித்தார்கள். அதற்குப் பிறகு இந்த ஆண்டு 2023 அவனியாபுரத்தில் முதல் பரிசாக முதலமைச்சர் சார்பாக கார் ஒன்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவனியாபுரம் களத்தில் இறங்கிய விஜய் நான்காம் சுற்றில் இறங்கினார். அவர் இறங்கிய நான்காம் சுற்றிலேயே 15 காளைகளை பிடித்து விட்டார். பிறகு சிறிது காயங்கள் ஏற்பட இறுதிச்சுற்றில் கலந்து கொண்டு மொத்தமாக சுமார் 28 ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி முதல் பரிசாக முதலமைச்சர் சார்பாக வழங்கப்படும் காரை பெற்றார்.

இது குறித்து விஜய் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக முதல் பரிசை பெற்று வருகின்றேன். இந்த ஆண்டு முதலமைச்சர் சார்பாக வழங்கப்படும் காரை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்க வேண்டும் என்று எண்ணிய எனக்கு உறுதுணையாக இருந்தவர் என் அண்ணன் தம்பிகள்தான். அவர்கள்தான் எனக்கு துணையாக இருந்தார்கள்.

உணவு கட்டுப்பாடு - விரதம்:

ஜல்லிக்கட்டு காளைகளை பிடிப்பதற்கு என சில பயிற்சிகளும் எடுப்பேன். அதில் காளையுடன் சேர்ந்து நீச்சல் அடித்தல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தல், நாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை வைத்தும் சிறு சிறு பயிற்சிகளை ஜல்லிக்கட்டு போட்டியை நெருங்கும்பொழுது எடுத்துக் கொள்வோம்.

உணவு முறையாக ஜல்லிக்கட்டு போட்டி செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே விரதம் எடுப்பதுபோல் எடுத்துக் கொள்வோம். அதுதான் போட்டிருக்கு தயாராகும் உணவு முறை தனியாக போட்டிருக்கு செல்வதற்காக உணவு முறை ஏதும் இல்லை.

பயந்தால் முடியாது:

இதுவரை ஜல்லிக்கட்டு காளைகளைப் பிடிப்பதினால் பலமுறை காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. கை, கால்களில் ஒருமுறை உதட்டை கிழித்துக்கொண்டு மூக்கு வரை காயங்கள் ஏற்பட்டது. பெரிய காயம் என்னவென்றால் கால்களில் அடிபட்டவைதான். ஆனால் இதையெல்லாம் பார்த்து பயந்தால் வாடிவாசலில் களம் இறங்க முடியாது என்கிறார்.

இறுதியாக அவர் கூறும் பொழுது, “அனைவரும் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு என்று இராமல் தனது குடும்பங்களையும் நினைத்துப் பாருங்கள் ஒரு மாதம் மட்டும்தான் ஜல்லிக்கட்டு போட்டி மற்ற நாட்கள் முழுவதும் நமது குடும்பங்கள்தான்” என்றார்.

First published:

Tags: Avaniyapuram, Jallikattu, Local News, Madurai