மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. ஆனால் தற்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு என ஒரு ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வெகு விமர்சையாக உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது அலங்காநல்லூரில் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு எனவே பல்லாயிரக்கணக்கான மக்களும் மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்கள் என அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு என ஒரு பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு முன்பு ஜல்லிக்கட்டு மைதானம் கட்டும் இடமான அலங்காநல்லூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த வகையில் தற்போது ஜல்லிக்கட்டு என புகழ்பெற்ற அலங்காநல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய கீழக்கரை என்ற ஒரு கிராமத்தில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூபாய் 44 கோடி மதிப்பீட்டில் 3 தளங்கள் கொண்டு 7,212 சதுர மீட்டர் அளவில் பிரம்மாண்டமான தற்போதைக்கு 5000 பேர் பார்க்கக்கூடிய வகையில் இந்த மைதானமானது கட்டப்பட்டு வருகிறது.
இதுபோக நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு என தற்போது கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்திலேயே கலைநயம் மிக்க காளைகளின் உருவங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவையும் ஜல்லிக்கட்டை பார்க்க வரும் வீரர்களுக்கு ஓய்வரை நிர்வாக அலுவலகம் அவசர சிகிச்சை மையம் காத்திருப்போர் அறை காளைகளுக்கென தனி இடம் வாகனம் நிறுத்தம் கழிவறை என பல்வேறு வகையான வசதிகளைக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த மைதானத்தை கட்டும் வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்க கூடிய நிலையில், அடுத்த ஆண்டு அதாவது 2024 ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிகட்டிற்கு முழு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு எனவே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Local News, Madurai