முகப்பு /மதுரை /

ஈஷா சிவராத்திரி விழாவை மதுரை காந்தி மியூசியத்தில் நேரடியாக கண்டுகளித்த மக்கள்..!

ஈஷா சிவராத்திரி விழாவை மதுரை காந்தி மியூசியத்தில் நேரடியாக கண்டுகளித்த மக்கள்..!

X
ஈஷா

ஈஷா சிவராத்திரி விழா

Madurai Gandhi Museum | ஈஷா யோகா மையம் சார்பாக மதுரையில் பல்வேறு இடங்களில் ரத யாத்திரை பவனி மூலம் காந்தி மியூசியம் மைதானத்தில் ஈசன் உடன் ஓர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்புகள் விடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

சத்குருவினால் உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரியை கொண்டாடும் வகையில் ஈஷா யோகா மையம் சார்பாக மதுரையில் பல்வேறு இடங்களில் ரத யாத்திரை பவனி மூலம் காந்தி மியூசியம் மைதானத்தில் ஈசன் உடன் ஓர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்புகள் விடப்பட்டது.

அந்த வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யும் வகையில் மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுமார் 6 மணி அளவில் மைதானம் முழுவதும் இருக்கைகள் அமைக்கப்பட்டும், பெரிய எல்இடி திரை ஒன்றையும் பொருத்தப்பட்டு அதில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் பக்தர்களுக்காக ஈஷா யோகா மையம் சார்பாக பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு விடிய, விடிய நடைபெறும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

First published:

Tags: Local News, Madurai, Maha Shivaratri