முகப்பு /மதுரை /

மதுரை காந்தி மியூசியத்தில் களைகட்டிய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி..!

மதுரை காந்தி மியூசியத்தில் களைகட்டிய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி..!

X
மதுரை

மதுரை காந்தி அருங்காட்சியகம்

Madurai District | மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் நடந்த உலகப் பெண்கள் தின நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம்தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியக அரங்கத்தில், சர்வதேச பெண்கள் தினம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தலைமையுறையாக, காந்தி நினைவு அருங்காட்சியத்தின் செயலாளர் நந்தாராவும் வாழ்த்துறையாக காந்தி அருங்காட்சியகத்தின் பொருளாளர் செந்தில்குமாரும், சிறப்புரையாக ராஜயோக தியான ஆசிரியர் ராணியும், நாட்டில் பெண்களின் பங்களிப்பு, காந்திய பெண்ணிய சிந்தனை, பெண்களின் சிறப்பு, பெண்ணியம், பெண்கள் நாட்டின் கண்கள் பற்றி திண்டுக்கல் முத்தையா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் படிக்கக்கூடிய பி.ஏ. வரலாற்று துறை மாணவியுடன் பேசி கலந்துரையாடினர்.

இந்த நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் நன்றியுறையைகாந்தி நினைவு அருங்காட்சியகத்தின் கணக்காளர் சுமித்ரா பேசவிழா இனிதாக நிறைவடைந்தது.

First published:

Tags: International Women's Day, Local News, Madurai, Women's Day