மதுரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தொல்லியல் ஆய்வு மூலம் கண்டெடுக்கப்பட்டு தமிழக அரசு சார்பாக கீழடி கிராமத்திலேயே அருங்காட்சியகம்அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் 6 தளங்கள் உள்ளது. அதில் 4வது தளமான ஆடையும் அணிகலனும் என்ற பெயரிலான தளம் உள்ளது. இந்த தளத்தில் சங்க கால மக்கள் இரும்பு தொழிலை செய்து வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்களான இரும்புப் பொருட்கள், இரும்பு தாதுவை உருக்கும்போது வெளியேற்றும் கழிவான இரும்பு கசடுகள், இரும்பு உலைக்கு காற்றுசெல்லும் குழாயான ஊதுகுழாய்கள், வேட்டையாடுவதற்கும், மரம், கல், உலோகத்தை வெட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவி, இரும்பு ஆணிகள், இரும்பு கடப்பாரை,அருவாள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களி
மேலும் இந்த இரும்புத் தொழில் பற்றிய அனிமேஷன் வீடியோ ஒன்றும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த அனிமேஷன் வீடியோவை பார்த்துவிட்டு முன்னேறி சென்றால்அங்கு சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள் எனப்படும்பருத்தியை நூலாக திரிக்க பயன்படும் கருவியும், சுடுமண் அச்சுக்கள், எலும்பு முனைகள், தறிக்கூண்டு நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர சூது பவள மணிகள், படிக மணிகள், கண்ணாடி மணிகள், அக்கேட் மணிகள், மாவுக்கள் மணிகள், செவ்வந்திக்கள் மணிகள் என பல விதமான பணிகள் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் கப்பல்
இங்கேயே கடல் வணிகம் என்ற ஒரு பிளாக் உள்ளது. இதன் உள்ளே சென்றால் தண்ணீரில் மிதக்கக்கூடிய ஒரு கப்பலின்மாதிரி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாக்கில் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குடன் கப்பல் மாதிரி வைக்கப்பட்டுள்ளது அழகாக இருப்பதால் அங்கு ஒரு செல்பி எடுத்து விட்டு உள்ளே சென்றால்நாணயங்கள் என்ற தலைப்பில் சங்க கால பாண்டியர்களின் செப்புக்காசுகள், வெள்ளி முத்திரை நாணயங்கள், தங்க நாணயம், சோழர் நாணயங்கள், ஆங்கிலேயர் நாணயங்கள், மதுரை சுல்தான் நாணயங்கள் சுடுமண், முத்திரைகள் , உரைகள், எடைக்கற்கள் என அவழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Keeladi, Local News, Madurai