Home /madurai /

மதுரைக்கு போறீங்களா... மறக்காம இந்த இடங்களுக்குச் சென்று பாருங்கள்..

மதுரைக்கு போறீங்களா... மறக்காம இந்த இடங்களுக்குச் சென்று பாருங்கள்..

மதுரை காந்தி அருங்காட்சியகம்

மதுரை காந்தி அருங்காட்சியகம்

கோவில்களுக்குச் சிறப்பு பெற்ற மதுரையில் பல்வேறு சுற்றுலாத்தலங்களும் மக்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதன் கோயில்களும், சுற்றுலாத் தலங்களும் உணவும் மக்கள் அனுசரிப்பும் தான். நீங்கள் மதுரைக்கு சுற்றுலா செல்லும்போது கோயில்களை தவிர இந்த இடங்களுக்கும் மறக்காமல் சுற்றுலா செல்லலாம். மதுரையில் மக்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள சுற்றுலா இடங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

    அதிசயம் தீம் பார்க்:

    மதுரையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், மதுரை திண்டுக்கல் சாலையில் பறவை என்ற இடத்தில் உள்ளது இந்த நீர் விந்தை பூங்கா. இதில் நீர் விளையாட்டுக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த தீம் பார்க்கிற்கு காலையில் சென்றால் மாலை வரை பொழுது போக்க முடியும்.
    தொலைபேசி: 0452-2463843-51.

    காந்தி அருங்காட்சியகம்:

    மதுரையிலுள்ள ராணி மங்கம்மாள் அரண்மனையில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டது. அதில், காந்திய இயக்கத்தின் புகைப்படக் கண்காட்சி கூடம் உள்ளது. இவற்றோடு வரலாற்றுச்சின்னங்கள், கதர் மற்றும் கிராமத் தொழில் பிரிவும், தென்னிந்திய கைத்தொழிற் பிரிவும் உள்ளன. அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. மதியம் 2 மணி முதல் மாலை 5 45 வரை.

    குட்லாடம்பட்டி அருவி:

    பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் கொடைக்கானல் சாலையில் இந்த அருவி உள்ளது. குட்லாடம்பட்டியிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுமலை குன்றில், இயற்கைச் சூழலில் ஒரு பூங்கா உள்ளது. குட்லாடம்பட்டி அருவி 87 அடி உயரத்திலிருந்து கொட்டுகிறது. விடுமுறை, திருவிழா போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருவியில் குளித்து மகிழ்கிறார்கள். 500 வருட பழமையான தடாகி நாச்சியம்மன் கோயில் இந்த அருவி அருகாமையில் உள்ளது.

    திருமலை நாயக்கர் மஹால்:

    இத்தாலிய கட்டுமான கலைஞரின் உதவியுடன், இந்த வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை கட்டப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் மஹால் மாதிரி சொர்க்க விலாசம், ரெங்க விலாச என்ற இரண்டு பிரதான பிரிவுகள் கொண்டது. பிரமிக்க வைக்கும் ஆயிரங்கால் மண்டபம் இங்குதான் உள்ளது. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. தொலைபேசி: 0452-2332945, 2338992.

    இராஜாஜி பூங்கா

    அழகிய பொழுதுபோக்கு பூங்கா. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவை மாநகராட்சியே பராமரிக்கிறது. மதுரை மாநகராட்சி கட்டடம் அண்ணா மாளிகை அருகில் இந்தப் பூங்கா உள்ளது. நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. விடுமுறை இல்லை தொலைபேசி: 0452-2531012.

    அரசு அருங்காட்சியகம்

    காந்தி மியூசியம் வளாகத்திற்குள்ளேயே உள்ளது அரசு அருங்காட்சியகம். கடந்த 1981 ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி