முகப்பு /மதுரை /

ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் மக்களை கவர்ந்திழுக்கும் பானிபூரி ஸ்டால்..

ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் மக்களை கவர்ந்திழுக்கும் பானிபூரி ஸ்டால்..

X
பானி

பானி பூரி

Madurai | மதுரையிலுள்ள ஐஸ் க்ரீம் பானி பூரி கடை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் வகை வகையாய் ஒரு பானிபூரி ஸ்டால்...நாம் அனைவரும் பானி பூரி சாப்பிடுவதில் அதிக பிரியம் கொண்டவர்களாக இருப்போம். மிகவும் காரமாக இருந்தாலும் அதை சாப்பிடுவதில் ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் குளுகுளுவென ஐஸ்கிரீம்களில் பானிபூரி சாப்பிட்டு இருக்கிறீர்களா. மதுரையில் இருந்தால் நீங்கள் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க...

ஆம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாக்லேட் பானி பூரி மற்றும் மில்க் ஷேக் பானி பூரி எனும் வெரைட்டியான பானிபூர்களை விற்பனை செய்து வருகின்றார்.

பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். அதிலும் ஐஸ்கிரீம் பானி பூரி சாப்பிட்டால் எப்படி இருக்கும்.

ஐஸ்கிரீம்களில் இருக்கும் எல்லா பிளேவர்களிலும் இங்கு பானி பூரி கிடைக்கும். இதில் சாக்லேட் ஐஸ்கிரீம் பானி பூரி மற்றும் பால் சர்பத் பானி பூரி ஸ்பெஷல் ஆக உள்ளது.

"வாராரு வாராரு அழகரு வாராரு" மதுரை சித்திரை திருவிழாவுக்காக தயாராகும் அழகர் சப்பரம்..!

பானி பூரிகளில் சாக்லேட் பிஸ்கட் மற்றும் சாக்லேட் ஐஸ்கிரீம்களை போட்டு அதன் மேல் சாக்லேட் கிரீமை ஊற்றி சாப்பிட்டால் குளுகுளுவென டேஸ்டாக உள்ளது. மேலும் இவர்கள் ஸ்பெஷல் ஆக செய்த பால் சர்பத்தை பானிபூரிகளில் ஊற்றி பால் சர்பத் என்ற ஒன்றையும் விற்பனை செய்து வருகின்றார்கள்.

First published:

Tags: Local News, Madurai