ஹோம் /மதுரை /

ஐஸ்கிரீம் தோசை சாப்பிட்டுருக்கீங்களா..? மதுரைல இந்த ஹோட்டல மிஸ் பண்ணிடாதீங்க..!

ஐஸ்கிரீம் தோசை சாப்பிட்டுருக்கீங்களா..? மதுரைல இந்த ஹோட்டல மிஸ் பண்ணிடாதீங்க..!

ஐஸ்கிரீம் தோசை

ஐஸ்கிரீம் தோசை

Madurai District News : மதுரையில் ஐஸ்க்ரீம் தோசை சாப்பிட விருப்பமுள்ளவர்கள் இந்த கடைக்கு போங்க.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை என்றாலே தூங்கா நகரம் என்று மக்கள் கூறுவர். மேலும், மதுரைகாரங்க பாசக்காரங்களே என்றும் சினிமா படங்களிலும் வசனங்களும் வரும். அதற்கு ஏற்றார் போலவே சாப்பாடு பரிமாறும் விதத்திலும் காணப்படுகிறது.

மதுரையில் ஏராளமான உணவு வகைகளும் தின்பண்டங்களும் கிடைக்கிறது. இதில், சைவம் - அசைவ உணவுகளும் பிரமாதமாகவும் இருக்கும்.

புரோட்டா, இலை புரோட்டா, கொத்து புரோட்டா, சிக்கன் புரோட்டா, பன் புரோட்டா, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, ஜூஸ் வகைகளிலும் பட்டையை கிளப்பி சுவையான உணவுகளை ஹோட்டல்களிலும் வீடுகளிலும் சமைத்து பரிமாறி வருகின்றனர்.

இதில் ஜிகர்தண்டாவும் மதுரைக்கு மற்றொரு பெயரை எடுத்துக் கொடுத்துள்ளது. இந்த ஜிகர்தண்டாவிலும் பல்வேறு வகைகளையும் கொண்டு வந்துள்ளனர். இதையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பருகி வருகின்றனர்.

இதையும் படிங்க : பாண்டியநாட்டின் அடையாளம் எங்கே? மதுரை ரயில் நிலையத்தில் 3 மீன் சிலைகளை நிறுவ கோரிக்கை..!

தற்போது, ஏராளமான உணவு வகைகள் ஹோட்டல்களிலும், கையேந்தி பவன்களிலும் கிடைக்கின்றன. அனைத்தும் சுவைமிகுந்த உணவாக தருகின்றனர்.

இந்த வகையில் தற்போது, உணவு குறித்து பார்க்கலாம். மதுரையில், ஒரு ஹோட்டலில் எப்போதும் தோசை மட்டுமே கிடைக்கும். ஆனால் அது சுவையாகவும் வித விதமானதாகவும் இருக்கும். வட இந்தியாவில் கிடைக்கும் தோசை அல்ல. இது நமது வீடுகளில் கிடைக்கும் தோசை போன்றே இருக்கும்.

ஐஸ்கிரீம் தோசை : 

பட்டர், சீஸ் எல்லாம் சேர்த்து ஐஸ்கிரீம் தோசையை வழங்குகின்றனர். இது மிகவும் சுவையானதாக இருக்கிறது. கூடவே சட்டினி மற்றும் சாம்பார் வகைகளுடன் பரிமாறுகின்றனர். வெறுமனமே சாப்பிடலாம். இல்லை என்றால், சட்டினியுடன் நனைத்தும் ஐஸ் கிரீமுடனும் சாப்பிடலாம்.

ஐஸ்க்ரீம் தோசை

செஸ்வான் தோசை :

தோசையில் செஸ்வான் மசாலாவும், சன்னல் மசாலாவுடன் சேர்த்து சமைத்து இந்த செஸ்வான் தோசையை வழங்குகின்றனர். இதை சட்டினி சாம்பார் இல்லாமலும் சாப்பிட முடியும். இதிலே சீஸ் உடன் சன்னல் மசாலா கலந்திருப்பதால் சுவையானதாகவும் இருக்கிறது.

செஸ்வான் தோசை

இதையும் படிங்க : விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. உறுப்பு தானம் மூலம் பலருக்கு வாழ்க்கை கொடுத்த நபர்.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

பீசா தோசை :

பூண்டு தோசை, பீசா தோசை, பட்டர் க்ரஞ்ச் தோசை உள்ளிட்டவைகளும் கிடைக்கிது. பூண்டு தோசையில், பூண்டு துவையில் உடன் இருக்கிறது. பீசா தோசை சுவைப்பதற்கு உண்மையாகவே பீசா போலவே இருக்கிறது. பட்டர் க்ரஞ்ச் தோசை சாப்பிட்டால் சுவையானதகவும் இருக்கிறது.

பீசா தோசை

மதுரையில் ஸ்ரீஐயப்பன் தோசை கடையில் விதவிதமான தோசை வகைகள் கிடைக்கின்றன. இதில் ஒரு தோசை ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. வகைகளுக்கு ஏற்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரும்பினால், இந்த கடைக்கு சென்று நீங்கள் தோசை வகைகளை ஆடர் செய்து சுவையை பார்த்துவிட்டு வாருங்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai