Home /madurai /

யானைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நரசிங்கப் பெருமாள் (அ) யோக நரசிம்மர் கோவிலின் சிறப்புகள்...

யானைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நரசிங்கப் பெருமாள் (அ) யோக நரசிம்மர் கோவிலின் சிறப்புகள்...

யானைமலையின்

யானைமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நரசிங்கப் பெருமாள் (அ) யோக நரசிம்மர் கோவிலின் சிறப்புகள்...

Madurai Othakadai Yoga Narasimmar Temple : மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சியில் அமைந்துள்ள ஶ்ரீ யோக நரசிம்மர் திருக்கோயில் சுமார் 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையானது என இங்குள்ள மக்களால் கூறப்படுகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
மதுரை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தக்கடை ஊராட்சி யானைமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தான் இந்த யோக நரசிம்மர் திருக்கோயில்.

பகவான் ஶ்ரீ விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம், முதன் முதலில் இங்கு தான் எடுக்கப்பட்டதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. அவ்வாறு இங்கு விஷ்ணு பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் பொருட்டு இங்கு இந்த யோக நரசிம்மர் கோயில் அமைந்ததாகவும் இது சுமார் 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான கோயில் என்றும் இங்குள்ள மக்களால் கூறப்படுகிறது.

நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் கோயில் (அல்லது) யோக நரசிம்மர் கோயில் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை ஊராட்சிக்கு அருகே உள்ள நரசிங்கம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மையான குடைவரைக் கோயில் ஆகும்.

யோக நரசிம்மர் கோவில்..


இக்கோயில் கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும்.

யோக நரசிம்மர் கோவில்..


இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் இது நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய நரசிம்மர் உருவம் உடைய கோயிலாகும்.

Yanaimalai Yoga Narasimhar temple
யானைமலை நரசிங்கம் கோவில்
Published by:Arun
First published:

Tags: Hindu Temple, Local News, Madurai

அடுத்த செய்தி