முகப்பு /மதுரை /

மதுரை தமுக்கம் மைதானத்தில் வீட்டுமனை கண்காட்சி!

மதுரை தமுக்கம் மைதானத்தில் வீட்டுமனை கண்காட்சி!

X
மதுரை

மதுரை தமுக்கம் மைதானத்தில் வீட்டுமனை கண்காட்சி

Madurai News | கனவு இல்லத்தை நினைவாக்கும் வகையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் மனை வாங்குவது முதல் வீடு கட்டுவது வரை வழிகாட்டும் ஃபேர் ப்ரோகண்காட்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

நாம் அனைவருக்கும் சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு ஏற்றார்போல் நமது இந்த கனவை நனவாகும் வகையில் மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் ஃபேர் ப்ரோ கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சி மனை வாங்குவது முதல் வீடு கட்டுவது வரை வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்த கண்காட்சியில் சுமார் 20 ஸ்டால்கள் போடப்பட்டுள்ளது. இடம் வாங்குவதற்கும் வில்லா வீடுகள், தனி வீடுகள் கட்டி தருவதற்கான கட்டுமான நிறுவனங்களின் ஸ்டால்கள் ஆன ஜெயபாரத் ஹோம்ஸ், எனர்ஜி லிவ்விங் எஸ்கேப், விஷ்வாஷ் ப்ரோமோட்டர்ஸ், ஏ.பி.ஆர் எனர்ஜி பிரிக்ஸ், ஜே.ஆர்.ஸ்மார்ட் ஹோம், அன்னை பாரத் ஹோம்ஸ் போன்ற ஸ்டால்களும் ஹெச்டிஎஃப்சி ஹோம் லோன், ஐசிஐசிஐ மற்றும் கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி ஹோம் லோன் போன்ற நிறுவனங்களின் பல்வேறு வகையான ஸ்டால்கள் அமைந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சாமானியரின் மாத பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியான வீடுகள் எப்படி வாங்கலாம், எந்த மாதிரியான வீடுகள் வாங்கலாம், வீடுகள் வாங்க வங்கிகளில் எந்த மாதிரியான வீட்டு கடன்களும் பெறலாம் என்று ஒவ்வொரு ஸ்டால்களிலும் உள்ள கட்டுமான நிறுவனங்கள் வழிகாட்டுகின்றனர். மேலும் இந்த கண்காட்சி இரவு 9 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Madurai