Home /madurai /

மதுரை திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் வரலாறும் சிறப்புகளும்..

மதுரை திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் வரலாறும் சிறப்புகளும்..

மதுரை

மதுரை திருமோகூர் காளமேகபெருமாள் கோவில்

Madurai Thirumohoor Shri Kalameghaperumal Temple | 108 வைணவத் திருத்தலங்களில் திருமோகூர் காளமேக பெருமாள் கோயிலும் ஒன்றாகும். மதுரையிலிருந்து 12 கிமீ தொலைவில் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
மதுரை - மேலூர் சாலையில் உள்ள ஒத்தக்கடை எனும் ஊரிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் தான் திருமோகூர் காளமேக பெருமாள் திருத்தலம்.

108 திவ்ய தேசங்களில் திருமோகூர் 94 வது திருத்தலம். நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த தலம். இங்கு பெருமாள், காளமேகப் பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

காளமேகம் என்றால் கருமையான மழையைத் தரும் மேகம் என்று பொருள். பக்தர்களின் வேண்டுகோளுக்கு தாமதிக்காமல் அருளை மழைபோல் பொழியும் பெருமாள் என்பதால் இவருக்கு அந்தப் பெயர். இங்குள்ள உற்சவருக்கு, ‘திருமோகூர் ஆப்தன்’ என்று பெயர். ஆப்தன் என்றால் நண்பன் என்று பொருள். தெய்வம் என்ற நிலையிலிருந்து நண்பனாய் நம் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து நம்மோடு வழித்துணையாய் வரும் பெருமாள் இவர் என்பதால் ஆப்தன் என்ற திருநாமத்தாலேயே அழைக்கப்படுகிறார்.

இதையும் படிங்க:  தொழில் தொடங்க விரும்பும் மதுரைவாசிகளே.. ரூ.17.5 லட்சம் வரை மானியம் கிடைக்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

திருமோகூர் தலத்துக்கு வரலாற்றுச் சிறப்புகளும் புராணச் சிறப்புகளும் ஏராளம். இந்தத் தலத்தில் தான் பெருமாள் தேவர்களுக்கு மட்டுமல்ல, துவாபர யுகத்தில் புலஸ்திய முனிவர் தவம் இருந்து வேண்டிக்கொள்ள, அவருக்குக் கூர்ம அவதாரத்தின்போது தான் எடுத்த மோகினி அவதாரத்தைக் காட்டியருளினாராம். எனவேதான் இந்த ஊர் மோகூர் என்ற பெயர் பெற்றது.

இந்த கோயிலில் ராஜகோபுரமும் உயர்ந்த மதில்களும் விசாலமான பிராகாரமுமாக அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். இந்த ஆலயத்தை தேவ சிற்பியான விஸ்வகர்மா கட்டியதாக மக்களால் நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: மதுரையில் 23-ம் தேதி தொடங்குகிறது புத்தக கண்காட்சி  - மாணவர்கள் திறமையை மேம்படுத்த பயிலரங்கம்

கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கில் கம்பத் தடி மண்டபம். இதில், ஆலயத் திருப்பணி செய்த மருது சகோதரர்களின் சிலாரூபங்கள் காணக்கிடைக்கின்றன. அடுத்தது கருட மண்டபம். சீதாதேவியை அணைத்தபடி காட்சிதரும் ஸ்ரீராமன், ரதி மன்மதர் என்று இந்த மண்டபத்தின் தூண் சிற்பங்கள் எழிலுறத் திகழ்கின்றன. மண்டபத்தில் நடுநாயகமாக கருடன் அருட்காட்சி தருகிறார்.

இங்குள்ள ரதி - மன்மதன் உருவங்களுக்குத் திருமணமாகாதவர்கள் மஞ்சள் பூசி வழிபடும் வழக்கம் இருந்துவருகிறது. அவ்வாறு செய்தால் தங்களின் இளமையும் அழகும் அதிகரித்து விரைவில் திருமணவரம் கைகூடப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து... மகாமண்டபத்தைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபம். கருவறையில், அழகிய விமானத்தின் கீழ், தேவியருடன் கிழக்கு நோக்கிய திசையில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீ காளமேகப் பெருமாள்.

Thirumohoor Shri Kalameghaperumal Temple
மதுரை திருமோகூர் காளமேகபெருமாள் கோவில்
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி