Home /madurai /

மதுரை தங்கரீகல் தியேட்டர் பற்றி பலரும் அறிந்திராத உண்மைகள்..

மதுரை தங்கரீகல் தியேட்டர் பற்றி பலரும் அறிந்திராத உண்மைகள்..

மதுரை

மதுரை தங்கரீகல் தியேட்டரின் வரலாறு

Madurai Thanga Regal Theatre | தங்கரீகல் திரையரங்கம் மதுரையின் மிக பழமையான திரையரங்குகளில் ஒன்றாகும். இதற்கு சில வரலாற்று சிறப்புகள் இருப்பது மதுரைவாசிகளே அறிந்திராத ஒன்றாகும்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை ரயில் நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ள தங்கரீகல் திரையரங்கம் மதுரையின் முக்கியமான, பழமையான திரையரங்குகளில் ஒன்றாகும்.

மதுரை நகர மக்கள் மட்டுமல்லாது மதுரையை சுற்றி இருக்கக்கூடிய பல கிராம மக்களும் இங்கு வந்து திரைப்படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். 2008ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்ற இத்திரையரங்கத்தை பற்றி நமக்கு தெரிந்த அளவுக்கு அத்திரையரங்க கட்டிடத்தின் பெருமை பற்றி அதிகம் நாம் தெரிந்திருக்கவில்லை. இக்கட்டிடத்தின் உண்மையான பெயர் விக்டோரியா எட்வர்ட் அரங்கம் என்பது நம்மில் பலரும் அறிந்திராத ஒன்றாகும்..

தங்கரீகல் தியேட்டரில் உள்ள நூலகம்


இந்த விக்டோரியா எட்வர்ட் அரங்கம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் தாண்டிய நிலையில் இன்றும் இதன் சிறப்புகளை பலரும் அறிந்தது இல்லை.. அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் மதுரைக்கு வரும் நேரங்களில் இங்கு வந்து உரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடத்துவதுண்டு.

விக்டோரியா எட்வர்ட் மன்றம்


இது பற்றிய விக்டோரியா எட்வர்ட் அரங்கத்தின் செயலாளர் திரு. இஸ்மாயீல் அவர்கள் பேசுகையில், இந்த கட்டிடம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடம் என்றும் கட்டி முடிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு பின்னரே இதனை திரையரங்காக மாற்றி ஒளி படங்கள் காட்சிப்படுத்தபட்டதாகவும் பிந்தைய நாட்களில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தபட்டு இன்று மதுரையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றாக திகழ்வதாகவும் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த விக்டோரியா எட்வர்ட் அரங்கத்தில் ஒரு நூலகம் இருப்பது மதுரை வாசிகளுக்கே தெரியாத ஒன்றாகும்.. இங்குள்ள நூலகத்தில் போட்டி தேர்வுகள், கதைகள் மற்றும் பிற விஷயங்கள் சார்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி