Home /madurai /

மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்த சிறப்புமிக்க சிவாலயம் இதுதான்.. கருவறையில் சூரிய ஒளி படரும் அதிசய முத்தீஸ்வரர் கோவில்..

மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்த சிறப்புமிக்க சிவாலயம் இதுதான்.. கருவறையில் சூரிய ஒளி படரும் அதிசய முத்தீஸ்வரர் கோவில்..

மதுரை

மதுரை முத்தீஸ்வரர் கோவில்..

Madurai Mutheeswarar Temple | மதுரையில் இருக்கக்கூடிய சைவ தலங்களில் மிகவும் முக்கியமான கோயில் தான் இந்த முத்தீஸ்வரர் திருக்கோயில். புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு அடுத்த படியாக மதுரையில் சிறப்புமிக்க திருக்கோயில் இது..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
மதுரையிலுள்ள சிவ தலங்களில் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு அடுத்த படியாக சிறப்பு பெற்ற திருக்கோயில் தான் இந்த முத்தீஸ்வரர் திருக்கோயில்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான ஆலயங்கள் இருந்தாலும் சில நூறு பெரிய ஆலயங்களில் கருவறையிலுள்ள இறைவன் சிலையின் மீது சூரிய ஒளிபடரும் அமைப்புடையவற்றை சூரிய பூஜை கோயில் என்று நம் முன்னோர்கள் போற்றி வருகின்றனர்.
அப்படிப்பட்ட சூரிய பூஜை கோயில்களில் மதுரை முத்தீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று.

பல முன் மண்டபங்களைத் தாண்டி கருவறையில் சூரிய ஒளி படர்வது ஒரு பொறியியல் சாதனை மட்டுமல்ல.. எல்லா மண்டபங்களையும் தாண்டி கருவறையில் கதிரவனின் ஒளி படருமாறு அமைப்பது ஏன்?

கருவறையில் சூரிய ஒளி படர வழி வகுப்பதும் கருவறையைச் சுற்றி மண்டபங்கள் எழுப்பும்போது வெளிச்சமும், வெயிலும், காற்றும் உள்ளே பரவுதற்காக, மேல் விதானத்தில் ஆகாயம் தெரியுமாறும், பிரம்ம வெளி என்றுஅழைக்கப்படும் ஜன்னல்கள் வைப்பதும் முக்கிய நியதிகளாகும், இயற்கைச் சக்தியோடு நமக்கு தடையற்ற தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றும் பல ஊர்களில் பெரிய வீடுகளில் திறந்த வெளி மாற்றங்கள் அமைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க:  மதுரையில் மட்டுமே கிடைக்கும் முள்ளு முருங்கை கீரை வடை சாப்பிட்டிருக்கீங்களா? - எங்க கிடைக்கும்?

அன்றாடம் இயலாவிட்டாலும் நாம் வருடாவருடம் எப்போதாவது அருவியிலும், ஆற்றிலும், கடலிலும் நீராடி ஆரோக்கியம் பராமரிப்பது போல, பல்லோரும் கூடிடும் ஆலயங்களிலும், அசுத்த நிலையை நீக்கி, தூய்ப்பிக்கும் முயற்சியே மிக நுணுக்கமான, அளப்பரிய சக்தி வாய்ந்த சூரிய ஒளியை பரவச்செய்யும் ஆலய இயல் நியதி இதுவாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மூர்த்திக்கு எதிரே நின்று அர்ச்சகர் பூஜிக்கலாகாது என்றும், பக்தர்கள் வழிபடலாகாது என்றும் கூறுவதற்கு காரணம், பின்னால் இருப்பவர்க்கு இறைவனை காண முடியாது என்பது மட்டுமல்ல, கருவறைக்கும் பிற மண்டபங்களுக்கும் இடையிலான ஒளி, ஒலி, காற்றுப்பரவல் தடை படக் கூடாது என்பதே மிக முக்கிய காரணம். பலவற்றில் சூரிய பூஜை அமைப்புடைமை பொது மக்களுக்குத் தெரியாமலேயே உள்ளது.

இதையும் படிங்க: மதுரை விவசாயிகள் பிரதமர் நிதி உதவி பெற இதை கட்டாயம் செய்ய வேண்டும்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சார்ந்த மதுரை தெப்பக்குளம் மேல்கரை மரகதவல்லி முத்தீஸ்வரர் கோயிலும் ஒரு முக்கிய சூரிய பூஜை கோயிலாகும்.

முத்தீஸ்வரர் கருவறையில் மார்ச் 11-23 மற்றும் செப்டம்பர் 19-30 தேதிகளில் சூரிய ஒளி பரவும் நேரம் கீழ்வருமாறு, மார்ச் காலை 6.35 முதல் 6.45 வரை, செப்டம்பர் காலை 6.15 முதல் 6.25 மற்றும 6.40 முதல் 6.50 வரை. முதலில் பரவும் மஞ்சள் ஒளிப்பிழம்பில் அபிஷேகமும் அடுத்த 15 நிமிட இடைவெளியில் அலங்காரமும், 2ம் முறை கண்ணைக்கூசும் வெள்ளொளிப் பரவலின் முடிவில் விஷேச தீப ஆராதனை யும் நடைபெறும்.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி