மதுரையில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றுதான் ஒத்தக்கடை நரசிங்கமங்கலம் பகுதியில் அமைந்துள்ள யானைமலை. இப்பகுதிக்கு செல்லும் வழியில் தான் சமணர்கள் பற்றிய சிற்பங்கள் இருக்கிறது. இச்சிற்பங்கள் மலையின் ஒரு பகுதியில் அமைந்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட படிகளைக் கடந்து தான் சமண சிற்பங்களை காண முடியும்.இச்சிற்பங்களை காண்பதற்கு என பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருவதினால் சமணர்களின் வரலாற்றை எடுத்துரைக்கவே அப்பகுதியில் வழிகாட்டி ஒருவர் உள்ளார்.
சமண சிற்பங்களை பற்றி அவர் கூறியதாவது, “உலகிலேயே ஒரே கல்லினால் ஆன பெரிய மலை இந்த யானை மலைத்தான். இந்த மலையில் இயற்கையாகவே அமைந்த குகையின் மேல்புற முகப்பில் சமண சிற்பங்கள் அமைந்துள்ளது.இங்குள்ள சமண சிற்பங்கள் சுமார் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. இங்குள்ள சிலைகள் சமணர்களின் புராணக்கதைகளை விளக்குகின்றன.
பார்ப்பசுவாமிநாதன் சிலையின் அவருக்கு மேலேதர்ணேந்திரன் என்பவன் ஐந்து தலைப்பாம்பாக மாறி குடைபிடித்துக் கொண்டிருக்கிறது. தர்ணேந்திரனின் மனைவியாகிய பத்மாவதி என்ற இயக்கி பார்சுவநாதருக்கு அருகில் ஒரு குச்சியைப்பிடித்திருப்பதுபோல் காணப்படுகிறது. கமடன் என்ற அசுரன் ஒருவன் பார்சுவநாதர் மேல் கல்லைத்தூக்கி போட வருவதுபோலவும், அவனிடமிருந்து காப்பது போல தர்ணேந்திரன் சிற்பமும் காணப்படுகிறது என இங்கு உள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கும் வரலாறு உண்டு.
இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் பல நூற்றாண்டை கடந்தும் கலைநயமிக்கவையாக இருக்கின்றது. மேலும் இங்கு உள்ள குகையில் தான் சமணர்கள் கல்வியை போதித்ததாகவும், குகையில் உள்ள பாறையில் உள்ள குழியில் தான் பல்வேறு வகையான மூலிகைகளைக் கொண்டு மருந்துகள் தயாரித்ததாகவும் கூறப்படுகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: History, Local News, Madurai, Tamil News