தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் நினைவாக அவரின் பெருமைகள், கொள்கைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் "அகில இந்திய நினைவு நிதி" நிறுவனத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான், தமுக்கம் அருகே உள்ள இந்த மதுரை காந்தி அருங்காட்சியகம்.
அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 1959ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இதுவே காந்திக்காக துவங்கப்பட்ட முதல் அருங்காட்சியகமாகும். இந்தியாவில் மொத்தம் உள்ள 7 காந்தி அருங்காட்சியகங்களுள் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் ஒரே காந்தி அருங்காட்சியகமாகவும் இது திகழ்கிறது.
கிழக்கு ஆசியாவின் ஏதென்ஸ் என்றும், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் மதுரைக்கும், காந்திக்கும் பல தொடர்புகள் உள்ளதன் காரணமாக இந்த அருங்காட்சியகம் மதுரையில் அமைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி அருங்காட்சியகமானது 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 300 ஆண்டுகால வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையிலான குறிப்புகள் முதல் பிரிவில் உள்ளது.
அடுத்ததாக மகாத்மா காந்திஜியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான முழு வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகளும்.
மூன்றாவது பிரிவில் மகாத்மா காந்தியின் ரத்த கறை படிந்த வேஷ்டி, தமிழில் அவர் எழுதிய கடிதம், அவருடைய மூக்குக்கண்ணாடி, செருப்பு உள்ளிட்ட காந்தி பயன்படுத்திய 14 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தமிழகத்துக்கு மொத்தம் 20 முறை வந்திருக்கிறார். இதில் மதுரைக்கு மட்டும் 5 முறை வருகை தந்திருக்கிறார். ஆடை புரட்சி, ஆலய பிரவேசம் என்ற 2 முக்கிய புரட்சிகள் தொடங்கப்பட்டது இந்த மதுரை மண்ணில் தான். இது குறித்த குறிப்புகள் அருங்காட்சியகத்தின் 4வது பிரிவில் காட்சிபபடுத்தப்பட்டுள்ளது..
1919, 1921, 1927, 1934 மற்றும் 1946 போன்ற ஆண்டுகளில் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்துள்ளார், அவ்வாறு வந்தபொழுது தான் அவர் அரை ஆடைக்கு மாறினார். அவர் மதுரைக்கு வந்த பின்னர் தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்க கோரும் இயக்கம், தீவிர உத்வேகம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Madurai Gandhi Museum
இத்தகைய வரலாற்றை நமக்கு நினைவுபடுத்தும் காந்தி மியூசியம் மதுரை மண்ணில் அமைந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை வாய்ந்த ஒன்றாகும். அதே நேரத்தில் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று இந்திய சுதந்திரம் குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் அறிந்துகொள்வது சிறந்த உணர்வை தரும் என்பதில் ஐயமில்லை.
மதுரை காந்தி மியூசியம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்.. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை..
தொடர்புக்கு: 0452 - 2531060
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.