முகப்பு /மதுரை /

காலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்... மாலையில் கொட்டித்தீர்த்த கனமழை!

காலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்... மாலையில் கொட்டித்தீர்த்த கனமழை!

X
மழை

மழை

Madurai | மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்ற நிலையில், மாலையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து கன மழை பெய்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடை காலத்தை முன்னிட்டு மதுரையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. நேற்று காலை 11 மணியளவில் இருந்து நான்கு மணி வரை 36 டிகிரி செல்சியஸில் இருந்து 41 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருந்தால் மக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் மதுரையில் கடந்த சில நாட்களாகவே காலையில் வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் மாபெரும் திருக்கல்யாண வைபவத்தை ஒட்டி மதுரையில் சுமார் 4 மணி அளவில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டி தீர்த்தது.

மதுரையின் பல்வேறு பகுதிகளான மாட்டுத்தாவணி, அண்ணாநகர், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் ஐயர் பங்களா, ஆரப்பாளையம் அண்ணா பேருந்து நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

top videos

    சித்திரை திருவிழாவின் முக்கிய நாளான மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து மாலை  நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. இது மதுரை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    First published:

    Tags: Local News, Madurai, Rain water