முகப்பு /மதுரை /

குருவித்துறை குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை துவக்கம்..!

குருவித்துறை குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை துவக்கம்..!

குருவித்துறை குரு பகவான் கோவில்

குருவித்துறை குரு பகவான் கோவில்

Gurupeyarchi 2023 | மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை தொடங்கியது. 

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் பாண்டிய நாட்டின் நவக்கிரக ஸ்தலமாகும். இங்கு குரு பகவான் சுயம்பு வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்தக் கோவிலில் வரும் சனிக்கிழமை இரவு குரு பெயர்ச்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று லட்சார்ச்சனை துவங்கியது.

இதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் மகா யாகம் நடைபெற்று, சனிக்கிழமை இரவு 11:24 மணி அளவில் வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கிறார். அதனை ஒட்டி பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ராசியினருக்கு லட்சார்ச்சனை துவங்கியது.

குரு பெயர்ச்சி வரை ஐந்து கால லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ஐந்தாம் கால லட்சார்ச்சனை நிறைவடைந்த உடன் மகா பூர்ணாஹூதி நிறைவுற்று குரு பெயர்ச்சி ஆகிறார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து லட்சார்ச்சனையில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

First published:

Tags: Gurupeyarchi, Local News, Madurai