மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “அஞ்சல் துறையில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை பெறுவதில் உள்ள தாமதம், குறைகள், ரயில்வே, தொலைத்தொடா்பு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று, அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை தீா்க்கும் வகையில் குறைதீர் கூட்டம் மதுரை பிபிகுளம் பகுதியில் நடைபெறுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே மதுரை தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலக பணியிட கணினி பயிற்சி மையத்தில் மார்ச் 19ம் தேதி காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும். கோட்ட அளவில் ஏற்கெனவே மனு கொடுத்து, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அளித்த பதிலில் திருப்தி அடையாதவா்கள் மட்டும் தங்களது குறைகள் தொடா்பான மனுவை கணக்கு அதிகாரி, அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தென்மண்டலம், மதுரை 625002 என்ற முகவரிக்கு மாா்ச் 16ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். நேரடியாக இந்த முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai