ஹோம் /மதுரை /

நாளை மதுரையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை மதுரையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Madurai District News | மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இதில், மதுரை மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில்  நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த மாததுக்கான கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.அனீஷ் சேகர் தலைமை தாங்குகிறார். இதில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிக்கலாம். மேலும், வோளண்மை, தோட்டக்கலைத்துறை, நீர்பாசனம், கூட்டுறவு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக கழகம், கால்நடை, மின்சாரம், தொடர்புடைய கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

இந்த கூட்டத்தில், விவசாயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது. மேலும், இதில் பங்கேற்க விரும்பும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு வரும் முன்னர் கணிணியில் தங்களது பெயர் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும்.  மனுக்களை கொடுக்கும் முன் ஒப்புதல் பெற்று, கணிணியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கொடுக்கப்படும் மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இந்த கூட்டத்தில் அரசு சார்ந்த அனைத்து அதிகாரிகளும் பங்கேற்பார்கள். எனவே, குறைகளையும் நிர்வர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Farmers, Local News, Madurai