இந்தியாவையே பிரமிக்க வைத்த இடம் தான் கீழடி அருங்காட்சியகம். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் அகழ்வாராய்ச்சி செய்த பொழுது கண்டெடுக்கப்பட்ட சங்ககால மக்களின் தொல்லியல் பொருட்களான அணிகலன்கள், தங்கத்தினால் ஆன பகடைகள், ஆட்டுக்காய்கள், ஈமதாழிகள், மணிகள், எலும்புக்கூடுகள், போன்ற பொருட்களை மக்களுக்கு காட்சிப்படுத்தக் கூடிய வகைகள் தமிழக அரசு சார்பாக 2 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம் கட்டப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அங்கு அதனுடைய பெருமைகளை அறிந்து கொள்ளும் வகையில் பசுமை நடை பயணம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவது நாளை காலையில் சங்க கால மக்களின் வரலாற்று சிறப்புமிக்க இடமான கீழடி அருங்காட்சியகத்திற்கு பசுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாளை காலை 6:15 மணியளவில் தெப்பக்குளம் மருது சிலை அருகில் தொடங்க இருக்கும் இந்த பசுமை நடைப்பயணத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்றால் 9789730105 என்ற எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்ய வேண்டும் என்று பசுமை நடை பயணம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் மூலம் நீங்களும் வரலாற்று சிறப்பு மிகக் கீழடி அருங்காட்சியத்தை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Keeladi, Local News, Madurai