முகப்பு /மதுரை /

வண்ண வண்ண மீன்கள் விற்பனை.. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அக்வாகல்ச்சர் துறை நடத்திய சேல்ஸ் டே!

வண்ண வண்ண மீன்கள் விற்பனை.. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அக்வாகல்ச்சர் துறை நடத்திய சேல்ஸ் டே!

X
வண்ண

வண்ண வண்ண மீன்கள் விற்பனை

Madurai News : மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மீன் வளர்ப்பு துறை சார்பில், கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து கிராண்ட் சேல்ஸ் டே நிகழ்ச்சியில் வண்ண வண்ண மீன்களை விற்பனை செய்தனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள மிகவும் பாரம்பரியமும், பழமையும் கொண்டஅமெரிக்கன் கல்லூரியில் பல்வேறு வகையான துறைகளைச் சார்ந்த வகுப்புககள்நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றான மீன் வளர்ப்பு மேலாண்மை மற்றும் நீர் வாழ் உயிரினங்களை பற்றி படிக்கக்கூடிய அக்வா கல்ச்சர் படிப்பு துறை உள்ளது. இந்தத் துறையின் சார்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து அக்வா கல்ச்சர் கிராண்ட் சேல்ஸ் டே என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாலி, பீட்டா போன்ற விதவிதமான வண்ண மீன்களும், ஒவ்வொரு மீன்களுக்கு ஏற்ற மாதிரியான மீன் உணவுகளும், மீன் வளர்ப்பதற்கு தேவையான பல்வேறு அளவுகளில் மீன் தொட்டிகளும், தொட்டிகளுக்கு ஏற்ற மாதிரியான மீன் தொட்டி மோட்டார்களும் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கான வலைகள், குழாய்களும் மீன் தொட்டியை அலங்கரிக்கும் வகையில் லைவ் பிளான்ட்ஸ் கற்கள் என ஒரு மீன் தொட்டி இருக்கு தேவைப்படும் எல்லா வகையான பொருட்களையும் கல்லூரி மாணவிகள் அனைவரும் இணைந்து விற்பனை செய்தனர். இந்தப் பொருட்களை சக கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றனர்.

    First published:

    Tags: Local News, Madurai