முகப்பு /மதுரை /

மதுரை சித்திரை திருவிழா : சிவப்பு பட்டுடுத்தி பூ பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

மதுரை சித்திரை திருவிழா : சிவப்பு பட்டுடுத்தி பூ பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

X
மதுரை

மதுரை சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் அன்று இரவு மீனாட்சி அம்மன் பூ பல்லாக்கில் எழுந்தொருளினார்

  • Last Updated :
  • Madurai, India

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். இந்த நிகழ்வானது காலை 8 மணி அளவில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மாலை 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லாக்கில் சிவப்பு பட்டுடுத்தி மீனாட்சி அம்மனும், யானை வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மன் சன்னதியில் இருந்து எழுந்தருளினர். இதையடுத்து மேள, தாளம் முழங்க மாசி வீதி முழுவதும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மல்லிகை கனகாம்பரம் போன்ற பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூ பல்லாக்கில் ஜடை அலங்கரிப்பு செய்து சிவப்பு பட்டுடுத்தி  நகைகள் அணிந்து காட்சியளித்தார் இக்காட்சியை காண்பதற்கு எனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் நான்கு மாசி வீதிகளிலும் குவிந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல், நேற்று திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்த முருகன் மற்றும் பெருமாள் ஆகியோர் மாசி வீதிகளில் வலம் வருவதற்காக மயில் வாகனத்தில் முருகனும் கருட வாகனத்தில் பெருமாளும் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

top videos

    இதுபோக மீனாட்சி அம்மன் கோவிலின் சுமதி யானை வலம் வந்து அதன் பின்பு பல குழந்தைகள் மீனாட்சி அம்மன், முருகன், சிவன், கருப்புசாமி போன்ற வேடம் அணிந்தும், சங்கூதி மேள தாளங்கள் என கொட்டடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாசி வீதிகள் முழுவதையும் சுற்றி வலம் வந்தனர். இந்நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் திரண்டனர்.

    First published:

    Tags: Local News, Madurai