புராட்டாசி மாதத்தையொட்டி மதுரை தல்லாகுளத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் சேஷசயன அலங்காரத்தில் காட்சி அளித்தார் பெருமாள்.
பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை ஆகும். அதிலும், தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி சனிக்கிழமை, பெருமாளுக்கு மிகவும் விசேஷமான ஒன்றாகும். இந்த மாதம் பெருமாளுக்கு மட்டுமின்று, நவராத்திரி நாயகிகளாகிய துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் மாதமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் பொதுவாக நெற்றியில் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் பெருமாளுக்கு பிடித்தமான பிற நைவேத்யங்களை செய்து பெருமாளை வழிபடுவது சிறந்தது.
இந்த நாளில் இடித்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய் கொண்டு அகலாக வடித்து, அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி பெருமாளை வழிபடுவது சிறந்தது.
இந்த நாளில் கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று பெருமாளின் நாமங்களை கோஷமிட்டு பிறரிடம் தானமாகப் பெற்று பின், பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவது சிறந்தது.
மதுரை தல்லாகுளத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 26-ந் தேதி அக்குரார்ப்பணம், 27-ந் தேதி கொடியேற்றம், 28-ந் தேதி கிருஷ்ணாவதாரம், 29-ந் தேதி ராமாவதாரம், 30-ந் தேதி கஜேந்திர மோட்சம், 1-ந் தேதி ராஜாங்க சேவை நடந்தது.
6-ம் நாள் காலை காளிங்க நர்த்தனமும், இரவு மோகனாவதாரமும் நடந்தது. பெருமாள் யானை வாகனத்தில் காட்சி அளித்தார்.
கோவிலில் 7-வது நாள் காலை சேஷசயனம் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து இரவு சூர்னோசயம் நடைபெற்றது. பெருமாள், புஷ்ப விமானத்தில் காட்சி அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai