இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மதுரை வழியே செல்லும் ரயில்களில் சில மாற்றங்களும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மதுரை வழியாக அனைத்து ரயில்களும் இயக்கப்படுகின்றன.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை தண்டவாள இணைப்புப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதன் காரணமாக கடந்த 27 நாட்களாக மதுரை வழியே செல்லும் ரயில்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
ரயில்களின் நேரம் மாற்றம், ரயில்கள் ரத்து மற்றும் செல்லும் வழித்தடம் மாற்றம் ஆகியவை செய்யப்பட்டிருந்தன. இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரயில் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில் தண்டவாளப் பணிகள் அனைத்தும் முழுவதுமாக நேற்றுடன் முடிவடைந்தன. இதனையடுத்து மீண்டும் பழையபடி மதுரை வழியாக ரயில்கள் இயக்கப்படும் என்றும்,இதுவரை மாற்றப்பட்ட நேரம் மற்றும் வழித்தடத்தில் இயங்கி வந்த ரயில்கள், ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் பழையபடி வழக்கமான வழித்தடத்தில், வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Railway Station, Southern railway