முகப்பு /மதுரை /

மதுரையில் இலவச ட்ரோன் பயிற்சி - முழு விவரம்..

மதுரையில் இலவச ட்ரோன் பயிற்சி - முழு விவரம்..

மதுரையில் இலவச ட்ரோன் பயிற்சி

மதுரையில் இலவச ட்ரோன் பயிற்சி

Free Drone Training | இலவச ட்ரோன் கருவி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் மாணவர்களுக்கு இலவச ட்ரோன் கருவி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டியூட் டெக்னாலஜி சென்டர் ஃபார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வளர்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக்கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும்.

இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மேலும் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் பழங்குடியின மாணாக்கர்களும் கல்வி தகுதிகள் 10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல் தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். பயிற்சி ஆனது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் பத்து நாட்கள் அளிக்கப்படும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூபாய் 61,100 தாட்கோவால் வழங்கப்படும் பட்சத்தில் DGCA ஆள் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள். மேலும் இந்த உரிமை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இப்பயிற்சியினை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கலாம் மற்றும் உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூபாய் 2. 25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தில் தகுதி உள்ள ஆதிதிராவிட பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai