மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித்தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதன்படி தற்போது பல்துறை சார் பணியாளர்கள் (Multi Tasking Staff) 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கும், ஹவில்தார் (Havaldar) வேலைக்கு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்குமான போட்டித் தேர்வுகள் பற்றிய அவிறிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதி இருப்பவர்கள் பிப்ரவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பிப்ரவரி 6ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பில், விருப்பம் இருப்பவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று துணை இயக்குனர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது குறித்து அவர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது எஸ்.எஸ்.சி., எம்.டி.சி., போட்டித் தேர்விற்கு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு முடித்த, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!
வரும் ஏப்ரலில் நடக்க உள்ள இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 17ஆகும். இந்த தேர்வினை தமிழ் மொழியிலும் எழுதலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 6ஆம் தேதி மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் தேர்வு விண்ணப்ப நகல், ஆதார் அட்டை ஜெராக்ஸ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், மதுரை வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் வருமாறு கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Competitive Exams, Local News, Madurai