முகப்பு /மதுரை /

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் மீன் மசாஜ் ஸ்பா வந்திருச்சு...!

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் மீன் மசாஜ் ஸ்பா வந்திருச்சு...!

X
மீன்

மீன் மசாஜ் ஸ்பா

Madurai Fish Massage Spa | மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் பாக்களில் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • madurai, India

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தற்போது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு இடமாக காட்சியளிக்கிறது. திருவிழா காலங்களில் இருப்பதுபோல் தினமும் இங்கு கூட்டம் அதிகரிப்பதால் ஃபுட் ஸ்ட்ரீட் போன்றவை திறக்கப்பட்டு இருந்த நிலையில் என்டர்டைன்மென்ட்காகவே பல வகையான விளையாட்டு தளங்களும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 இடியட்ஸ் மீன்கள் ஸ்பா என்ற ஒரு கடை தெப்பக்குளத்தில் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது.

பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் விரும்பக்கூடிய இடமாக இக்கடை இருப்பதற்கு காரணம் என்னவென்றால் இங்கு வைத்துள்ள மீன் தொட்டியில் கால்களை விடுத்து சிறிது நேரம் அதில் உட்காரும்போது மின் தொட்டியில் உள்ள மீன்கள் நமது காலை கடிக்கும்பொழுது ஒரு விதமான கூச்ச உணர்வும் ஏற்படுவதினால் இப்பகுதிக்கு அதிகமான மக்கள் கூடுகின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், “இங்கு மீன் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள மீன்கள் டாக்டர் மீன்கள் என்றும் அழைக்கலாம் இந்த மீன் தொட்டியில் கால்களில் விடுவதினால் ஏற்படும் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் பாத வெடிப்பு குணப்படுத்துதல் ரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துதல், புதிய செல்களை வளர செய்தல், ஒரு விதமான மைக்ரோ மசாஜ் குறிப்பாக பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க கூடியதாகவும் இருக்கின்றது. இத்தொட்டியில் கால்களை விடுவதற்கு சிறியவர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு 50 ரூபாயும் பெரியவர்களுக்கு 100 ரூபாயும் குறைந்தபட்சமாக வசூலிக்கப்படுகின்றது” என்றார்.

First published:

Tags: Local News, Madurai