ஹோம் /மதுரை /

மதுரை விவசாய கருவிகளுக்கு மானியம் - சுய உதவி குழுவினர், விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை விவசாய கருவிகளுக்கு மானியம் - சுய உதவி குழுவினர், விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை

மதுரை

Farmers Can Get Subsidy For Agricultural Instruments In Madurai | தீவனப்பயிர் அறுவடை எந்திரம், தீவனப்பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை 25 சதவீத மானியத்தில்  மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர், பால்பண்ணையார்கள் உட்பட  விவசாயிகள் விண்ணப்பித்து பயனைடையலாம். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

தீவனப்பயிர் அறுவடை இயந்திரம், தீவனப்பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை 25 சதவீத மானியத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர், பால்பண்ணையாளர்கள் உள்பட விவசாயிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.

இதையும் படிங்க ;  விடுதியில் பெண்களை ஆபாசமாக படமெடுத்து மருத்துவருக்கு அனுப்பிய கல்லூரி மாணவி.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

மதுரை மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இவ்வாண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

தென் மாவட்டங்களில் தெற்கு மண்டலம் அமைப்பில் உள்ள 5 மாவட்டங்களில் இருந்து மதுரை உள்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தீவனப்பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, தற்போது தீவனப்பயிர் அறுவடை இயந்திரம், தீவனப்பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை 25 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் தகுதியானோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதையும் படிங்க ; பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் நிதியுதவி பெறுவது எப்படி? - மதுரை கலெக்டர் அறிவிப்பு

மேற்கண்ட உபகரணங்களின் மொத்த விலை ரூ.42 லட்சம். இதில் பயனாளியின் பங்குத்தொகை ரூ.31.5 லட்சம் போக, 10.5 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், பால்பண்ணை உரிமையாளர்கள், சுயஉதவிக் குழுவினர் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியவை பயனாளியாகும் பொருட்டு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் படி ஒரு வருடத்திற்கு 3200 மெட்ரிக் டன் ஊறுகாய்புல் தயாரித்து விவசாயிகளுக்கு தேவையான பகுதியில் விற்பனை செய்வதோடு தீவனப்பற்றாக்குறையை பெரிதும் குறைக்க சாதக மாவதோடு தீவனப் பயிர் தொழில் முனைவோராக விவசாயிகளை உருவாக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்திட்டம் தொடர்பாக தகுதியான நபர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai