Home /madurai /

மதுரைவாசிகளின் ஃபேவரைட் இளநீர் சர்பத்.. இதில் என்ன ஸ்பெஷல்?

மதுரைவாசிகளின் ஃபேவரைட் இளநீர் சர்பத்.. இதில் என்ன ஸ்பெஷல்?

மதுரை

மதுரை : இளநீர் சர்பத்

Madurai Ilaneer Sarbath | மதுரையின் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமலை நாயக்கர் மகால் செல்லும் தெற்கு மாரட் சாலையில், தெற்கு வாசல் வடமலையான் மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது இந்த தாகம் இளநீர் சர்பத் கடை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
கோடை காலம் மட்டுமல்லாது பிற நாட்களிலும்  மதுரை மாநகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது.. அத்தகைய வெயில் தாக்கம் அதிகமுள்ள தருணத்தில் இளநீரை வாங்கி குடிக்கும் போது தான் உடலுக்கு எத்தனை குளிர்ச்சி.

ஜிகர்தண்டா, ரோஸ் மில்க், மோர், கரும்பு சாறு, இளநீர்  என நம் மக்கள் வெயில் நேரங்களில் குளிர்ச்சி தரக் கூடிய பல பானங்களை பருகுகின்றனர். ஆனாலும் மதுரையில்  இளநீர் சர்பத்திற்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது.

நன்னாரி சர்பத் கேள்விப்பட்டதுண்டு. நன்னாரியுடன் எலுமிச்சை, சோடா கலந்த சர்பத்தும் கூட இன்று கிடைக்கின்றது. பல இடங்களில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் வந்துவிட்டது. ஆனாலும் இந்த இளநீர் மற்றும் இளநீர் சர்பத் என்ற வார்த்தையை கேட்டவுடன் தனி ஆசை பிறக்கிறது.

இதையும் படிங்க:  மதுரைவாசிகளை சுண்டியிழுக்கும் புலியடிஸ் போளி கடை - கேள்விப்படாத விதவிதமான போளி வகைகள்..

மதுரையின் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமலை நாயக்கர் மகால் செல்லும் தெற்கு மாரட் சாலையில், தெற்கு வாசல் வடமலையான் மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது இந்த தாகம் இளநீர் சர்பத் கடை.

இந்த கடையில் தான் இளநீர் சர்பத், தேங்காய் பூ மில்க் ஷேக், ரோஸ் மில்க், நுங்கு சர்பத், தென்னம் பதனி, நுங்கு பால் சர்பத் என பல வகையான உடலுக்கு நன்மை தரக்கூடிய பானங்கள் விற்கப்படுகின்றன.

இதையும் படிங்க:  பாண்டிய மன்னனை மன்னிப்பு கேட்க வைத்த மாணிக்கவாசகர்- திருவாதவூர் கோவில் வரலாறு தெரியுமா?

இக்கடையில் நாம் மேற்கண்ட அனைத்து பானங்களும் தனி நபர்கான கண்ணாடி கிளாசில் 200ml  ₹40 முதல் ₹60 ரூபாய்க்கும் ஃபேமிலி பேக் ஆக பெரிய ஜாரில் ₹150 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

 

Thaagam Ilaneer Sarbath
மதுரை தாகம் இளநீர் சர்பத் கடை


 
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி