மற்ற ஊர்களை விட மதுரையில் விதவிதமான உணவுகளும், அவற்றின்சுவையும் தரமும் அற்புதமாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.அந்த வகையில் மதுரை தேர்முட்டி அருகே முட்டை போண்டா சாப்பிடுவதற்காகவே மக்கள் கூட்டம் ஒரு சாலையோர கடையை தேடிச் செல்கிறது.
மதுரை அம்மன் சன்னதி பகுதியில் தேர்முட்டி அருகில் சுமார் 25 வருடங்களாக இக்கடை இயங்கி வருகிறது.இக்கடையின் உரிமையாளர் சின்ன கருப்பன் கூறும் பொழுது, ”இக்கடையை நாங்கள் 25 வருடங்களாக நடத்தி வருகின்றோம் இக்கடையின் ஸ்பெஷல் என்னவென்று கேட்டால் முட்டை போண்டாவும் வெஜிடபிள் போண்டாவும் தான்.
இந்த போண்டா உடன் சேர்ந்து நாங்கள் ஸ்பைசி பொடியும், சட்னி வகைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்க கடை முட்டை போண்டாவை சாப்பிட மட்டுமே ஒரு ரசிகர் கூட்டம் இங்கு வந்து செல்கிறது. இது தவிரவெங்காய வடை, மிளகாய் பஜ்ஜி, சமோசா, சோமாஸ் என வித விதமான வடைகளை மதியம் முதல் இரவு வரை விற்பனை செய்து கொண்டிருக்கின்றோம் என்றார்.
எப்பொழுதும் கூட்டம் அலைமோதும் இக்கடையில் வாடிக்கையாளர் ஒருவரிடம் கேட்ட பொழுது, நான் இங்கு வரும்போது எல்லாம் இந்த கடையில் வடையை சாப்பிட்டு விட்டு தான் செல்வேன் நீ கடையில் உள்ள வடை மிகவும் சுவையாக இருக்கும் அதிலும் குறிப்பாக இங்கு உள்ள சட்டினி நன்றாக இருக்கும் என்பதால் இக்கடையை தேடி வந்து சாப்பிட்டு விட்டு செல்வேன் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Local News, Madurai