ஹோம் /மதுரை /

மதுரை-கச்சிகுடா, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில்களுக்கான புதிய அறிவிப்பு!

மதுரை-கச்சிகுடா, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில்களுக்கான புதிய அறிவிப்பு!

ரயில்

ரயில்

Madurai Train | எர்ணாகுளம்-வேளாங்கண்ணி, மதுரை-கச்சிகுடா ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின், மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை- கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில், டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என்று முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சேவை தற்போது, ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் குறித்து, மதுரை கோட்ட நிர்வாக அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கச்சிகுடாவில் இருந்து வரும் 7ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை, திங்கட் கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வரும்.

மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வரும் 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை புதன் கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்தநாள் காலை 7.05 மணிக்கு கச்சிகுடா செல்லும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா மற்றும் மல்காஜ்கிரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

அதேபோல், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர ரயில் சேவை நவம்பரில் இருந்து டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து வரும் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வரும் 20ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Train