ஹோம் /மதுரை /

ரூ.25,000 சம்பளம்... மதுரையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க

ரூ.25,000 சம்பளம்... மதுரையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க

சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு

சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு

Jobs in Madurai : மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

ஒப்பந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

சுகாதார மேலாளர், செவிலியர் பணியிடங்கள் - 2

கல்வி தகுதி: எம்.எஸ்சி., பி.எஸ்சி., நர்ஸிங்.

பணி அனுபவம் : 3 ஆண்டுகள்.

மாத சம்பளம் : ரூ.25,000.

ஒப்பந்த அடிப்படை.

மருந்தாளுனர் பணியிடங்கள் - 9

கல்வி தகுதி: டிப்ளமோ இன் பார்மஸி படித்து, பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ.15,000.

ஒப்பந்த அடிப்படை.

ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள் - 12

கல்வி தகுதி: பிளஸ் 2, மருத்துவ ஆய்வக சான்றிதழ் படித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் - ரூ.13,000.

ஒப்பந்த அடிப்படை.

பன்முக சுகாதார பணியாளர் பணியிடங்கள் - 8

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் - ரூ.8,500

ஒப்பந்த அடிப்படை.

இந்த பணியிடங்கள் தற்காலிகமானதால் பணிவரன்முறை, நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும், மேற்கண்ட கல்வி தகுதி உள்ளவர்கள் கல்வி சான்றிதழ் நகல்கள், போட்டோவுடன் கூடிய விண்ணப்பத்தை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை https://drive.google.com/file/d/15coVLvfavvAofZmAgpWGq8xMWbpV7FIR/view என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: நகர் நல அலுவலர், 3வது தளம், பொது சுகாதார பிரிவு, மாநகராட்சி மைய அலுவலகம், தல்லாகுளம், மதுரை.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

மேலும் விண்ணப்பத்தை நேரிலும் அளிக்கலாம். அத்துடன் chomducorp@gmail.com என்ற இமெயிலிலும் அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் - 06-02-2023 மாலை 5 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Employment, Job vacancies, Local News, Madurai, Nursing