முகப்பு /மதுரை /

"மதுரை மல்லிக்கு இயக்கம்.. பெண்கள் பொருளாதாரம் உயரும்" பேராசிரியர் கருத்து!

"மதுரை மல்லிக்கு இயக்கம்.. பெண்கள் பொருளாதாரம் உயரும்" பேராசிரியர் கருத்து!

X
மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்

Madurai District | தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மல்லி இயக்கம் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும் என அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரப் பேராசிரியரின் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் மதுரை மல்லி உற்பத்தி அதிகரிக்க 7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார துறை பேராசிரியர் முத்துராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரை சார்ந்து அறிவிக்க பட்டதில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் மதுரை மல்லி உற்பத்தி இயக்கம் திட்டத்திற்காக ஏழு கோடி மதுரையின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். பொருளாதார ரீதியாக பார்க்கும் பொழுது இந்த அறிவிப்பு மதுரை மில்லியின் பொருளாதாரம் மேம்பாட்டிற்கான முக்கிய பங்காக இருக்கின்றது.

இந்த ஏழு கோடி திட்டம் என்பது நல்ல விஷயங்களை தரக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் நாம் அனைவருக்கும் தெரியும் வரவு செலவு திட்டத்தில் நாம் எதிர்பார்க்கக் கூடியது பெண்களுக்கு ஊரகப்பகுதிகளுக்கு விவசாயிகளுக்கு ஏதேனும் சலுகைகள் உண்டா என்று நாம் எதிர்பார்ப்போம்.

இந்த திட்டத்தை பெண்கள் மற்றும் பெண் குடும்ப பொருளாதார சார்ந்த அறிவிப்பாக இருக்கின்றது என்று நான் பார்க்கின்றேன் அதற்கு காரணம் இந்த மதுரை மல்லிகை விவசாயத்திலும் ஒரு மாலையாக அதனை உருவாக்குவதிலும் பெண்கள் தான் இருக்கின்றார்கள்.

தினம்தோறும் இந்த மதுரை மாநகரிலேயே பூவின் தேவை அதிகம். ஆனால் அந்த அளவிற்கு உற்பத்தி இருக்கு என்றால் மதுரை மல்லி உற்பத்தி சில சிக்கல்களைக் கொண்டிருக்கின்றது.

வருமானம் இல்லாத நிலையிலும் வறட்சியிலும் தான் இந்த மல்லிகை பூக்கள் விலையும் சூழ்நிலை உள்ளது.

இந்த சூழ்நிலையில் இருக்கக்கூடிய மக்கள் சிக்கல்களை சந்திக்கின்றார்கள் சில பேர் நன்றாக உற்பத்தி செய்வார்கள் ஆனால் விலை இல்லாமல் இருக்கும். சில பேர் நன்றாக உற்பத்தி செய்வார்கள் ஆனால் அங்காடி படுத்த முடியாமல் இருக்கும். இதையெல்லாம் முயற்சி எடுக்கும் திட்டமாக தான் இந்த மதுரை மல்லிகை திட்டத்தை நான் நினைக்கின்றேன்.

பெண்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கவும், மல்லிகைப் பூ விவசாயிகளின் பொருளாதாரத்தை பெருக்கும் வகையில் இந்த திட்டம் இருப்பதினால இதனை வரவேற்பு தக்கக் கூடியதாக இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

அதே சமயம் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களின் மல்லிகைப் பூவின் உற்பத்தியை பார்க்கும் பொழுது இந்த 7 கோடி திட்டம் என்பது மிக மிக குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

First published:

Tags: Jasmine, Madurai