முகப்பு /மதுரை /

ஜனாதிபதி முர்மு நாளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை.. மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

ஜனாதிபதி முர்மு நாளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை.. மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

X
ஜனாதிபதியை

ஜனாதிபதியை வரவேற்க தயாராகும் மதுரை

Madurai News : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாளை (பிப்ரவரி 18ம் தேதி) ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை புரிகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக நாளை மதியம் 11 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்பு சுமார் 12 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி வருகையையொட்டி கீழ சித்திரை வீதியில் உள்ள அஷ்டம சக்தி மண்டபத்தை கொட்டி தற்காலிக ஓய்வு வரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

மேலும், சித்திரை வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும், போலீஸ் டவர்கள் மற்றும் பல்வேறு கேமராக்கள் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி சுத்தம் செய்யும் பணியும், ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், தெற்கு வாசல், கீழ்வாசல், விளக்குத்தூண் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருவதால் அவர் வரும் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்யும் பணியும் நடைபெறுகிறது. நாளை காலை 11 மணியளவில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Madurai