முகப்பு /மதுரை /

மதுரை ஏவி பாலத்தில் வளரும் செடி, கொடிகள்.. கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

மதுரை ஏவி பாலத்தில் வளரும் செடி, கொடிகள்.. கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

X
மதுரை

மதுரை ஏவி பாலம்

Madurai AV bridge | மதுரை ஏவி பாலத்தில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய முக்கியமான ஒன்றுதான் ஏவி மேம்பாலம்.பிரம்மாண்டமான தூண்களைக் கொண்டு தாங்கி நிற்கும் இந்த மேம்பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.மதுரையின் முக்கியமான போக்குவரத்து இடமான இந்த மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

அப்படி வரும்அத்தனை வாகனங்களின் எடையையும் அவற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்தும், பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கின்றது இந்த பாலம். இதுவரை பெரிய அளவில் எவ்விதமான விரிசல்களோ, பெரியபாதிப்போ இன்றிகம்பீரமாக நிற்கிறது.

ஆனால், தற்பொழுது இந்தப் பாலம் முறையான பராமரிப்புகள் இல்லாத காணப்படுகின்றது. மேம்பாலத்தின் பக்கவாட்டு ஓரங்களில் ஆங்காங்கே செடிகள் முளைத்து காணப்படுகின்றன. ஒவ்வொரு தூணின்மேல் பகுதியிலும்செடிகள் முளைத்திருப்பதால் தூண்கள் வழு இழந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை மாநகராட்சி அதிகாரிகள் உடனே செடிகளை அகற்றி பாலத்தை பராமரிக்க வேண்டும் என்றகோரிக்கைகள் எழுந்துள்ளன.

First published:

Tags: Local News, Madurai