முகப்பு /மதுரை /

மதுரையில் பேமஸாகும் கருவாடு கடை.. 30க்கும் மேற்பட்ட வெரைட்டீஸ்; இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம்!

மதுரையில் பேமஸாகும் கருவாடு கடை.. 30க்கும் மேற்பட்ட வெரைட்டீஸ்; இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம்!

X
மதுரை

மதுரை கருவாடு கடை

Karuvadu Shop at Madurai Railway Station | மதுரை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள கருவாடு கடையை கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நடத்தி வருகின்றார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் One Station one product என்ற திட்டத்தின்மூலமாக இந்தியாவில் முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் டிரை பிஷ் ( கருவாடு) கடை திறக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் உள்ள புதுமை பெண்கள் மகளிர் சுய குழு மூலமாக கருவாடுகள் தயார் செய்யப்பட்டு புதிதாக மதுரை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள லூமினியர் டிரை பிஷ் கடையை கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நடத்தி வருகின்றார்கள்.

30+ கருவாடு வகைகள்:

இந்தக் கடையில் சுமார் 30க்கும் மேற்பட்ட கருவாடு வகைகள் இருக்கின்றன. அதில் நெத்திலி, நெய் மீன், ஊழி, திருக்கை, உப்பிலி, வஞ்சரம், சூடை என பலவகையான கருவாடுகளும், உப்பில்லாத கருவாடுகளான நெத்திலி, சூை போன்ற கருவாடுகளும், மேலும் உலர்ந்த இறால், மாசி டூனா என விதவிதமான உலர் மீன்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தரச் சான்றிதழ்:

இங்கு விற்பனை செய்யப்படும் கருவாடு பாக்கியங்கில் லேப் டெஸ்ட் செய்யப்பட்டுள்ள கியூ ஆர் கோடுஸ்கேன் செய்து பார்த்தால் லேப் டெஸ்ட் செய்ததற்கான ரிப்போர்ட்டும் விவாகும் என்பது சிறப்பு அம்சம்.

மேலும் பாக்கெட்டில் மற்றொரு க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் இந்த கருவாடை வைத்து எந்த மாதிரியான சமையல்கள் செய்யலாம் என்ற அடிப்படையிலான யூட்யூபில் வீடியோ ஒன்றும் ஒளிப்பதிவாகும். இங்கு உள்ள பலவிதமான கருவாடுகள் 100 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகின்றது. இந்த கருவாடு பாக்கெட்டை சுமார் 6ல் இருந்து8 மாதங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மதுரை ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் இந்த கடை இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Fish, Local News, Madurai