மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த ஒரு நபர், அதிக மது போதையில் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார், மது அருந்தி உள்ளாயா? என்று கேட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில், திடீரென அந்த வாலிபர் டூவீலரில் இருந்து இறங்கி, அவர் வண்டியில் வைத்திருந்த மது பாட்டிலை சாலையில் உடைத்து விட்டார்.
இதில் அதிர்ச்சடைந்த போலீசார் மீள்வதற்குள், அந்த வாலிபர் திடீரென்று பெரியார் பேருந்து நிலையத்தின் மக்கள் நடமாட்டம் , வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் நடுரோட்டில் படுத்து உருண்டு அங்க பிரதட்சனம் மேற்கோண்டு ரகளையில் ஈடுபட்டார்.
போலீசார் வந்து தம்பி எழுந்துருங்க? எழுந்திருங்க? என வேண்டுகோள் விடுத்தனர். அப்போது, அந்த இளைஞர் என் வண்டியை கொண்டு வாங்க..? என்னிடம் பறித்த ஆவணங்களை கொடுங்க? சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல் கூறி வந்தார். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், குடி போதையில் சாலையின் நடுவே அமர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.
ஒரு வழியாக, வாப்பா, வாப்பா எல்லாம் தருகிறோம்? என கெஞ்சி கேட்டு கொண்டதை தொடர்ந்து, வாலிபர் தனது நூதன சாலை மறியலை விடுத்து சாலையோரம் வந்தார். அப்போதும், அந்த வாலிபர் என் வண்டியை கொண்டு வாங்க..? என்னிடம் பறித்த ஆவணங்களை கொடுங்க? என கூறி கொண்டு இருந்தார்.
மேலும் படிக்க... நம்ம ஊரில் ஏன் இப்படி வெயில் கொளுத்துது... என்ன ஆச்சு ?
இது தொடர்பாக மதுரை திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர் பெயர் கார்த்திக் என தெரிய வந்தது.
வாகன சோதனை நடத்தியது தப்பா? என்ற புலம்பியபடி போலீசார் தங்களது பாதுகாப்பு பணியை தொடர்ந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Madurai