ஹோம் /மதுரை /

அறியப்படாத புத்தகங்களின் அணிவகுப்பு.. மதுரை காந்தி மியூசியத்தில் இப்படி ஒரு புக் ஷாப்பா?

அறியப்படாத புத்தகங்களின் அணிவகுப்பு.. மதுரை காந்தி மியூசியத்தில் இப்படி ஒரு புக் ஷாப்பா?

X
மதுரை

மதுரை

Madurai Gandhi Museum : மதுரையிலுள்ள காந்தி மியூசியத்தில் என்னென்ன புத்தகங்கள் கிடைக்கின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் உள்ள காந்தி மியூசியம் தான் இந்தியாவிலேயே மிகவும் பழமையான காந்தி மியூசியம். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், வெளிநாட்டவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். காந்தி மியூசியம் அருகிலேயே காந்திய இலக்கியச் சங்கம் சார்பாக நடத்தப்படும் புக் ஷாப் ஒன்றும்உள்ளது. இந்த புத்தக கடையில் வரலாற்று பக்கங்களை அறிந்து கொள்ளும் வகையில் தலைவர்களின் கதைகள், குழந்தைகளுக்கு புத்தகங்களில் ஆர்வம் அதிகரிக்கும் வகையில் காமிக்ஸ் கதைகளும் மருத்துவ பயன்தரும் வைத்திய புத்தகங்கள், காந்திய சிந்தனை என பலதரப்பட்ட மக்களால் அறியப்படாத புத்தகங்கள் இங்கு கிடைக்கிறது.

மேலும் இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்தும் யோகா கிட்களும், மருத்துவ பொடிகளும், உடல் வலியை போக்கக்கூடிய மரத்தினால் ஆன பொருட்களும் இங்கு இருக்கிறது.

First published:

Tags: Local News, Madurai