Home /madurai /

மதுரை  மாவட்டத்தில் நாளை பல இடங்களில் மின் தடை - உங்க பகுதி இருக்கானு பாருங்க...

மதுரை  மாவட்டத்தில் நாளை பல இடங்களில் மின் தடை - உங்க பகுதி இருக்கானு பாருங்க...

மதுரை

மதுரை

Madurai District Power Shut Down | மதுரை மாவட்டத்தின் இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிகோவில், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு நாளை மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை அருகே உள்ள இலந்தைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை (23-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட இருக்கிறது.

இதையும் படிங்க்; பாக்கெட் உணவுப்பொருட்கள் வாங்குபவரா நீங்கள்... மதுரை உணவு பாதுகாப்புதுறை அலெர்ட்
 மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரை அருகே உள்ள இலந்தைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை செய்யப்படும் இடங்கள்:

இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பக தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகனேரி, ராஜுவ் காந்தி நகர், சோலை மலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி. நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர் பின்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வாடிப்பட்டி பகுதியில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்:-

ரிஷபம், மோகன் பிளாட், திருமால் நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா, பரவை, பரவை காலனி, கோவில் பாப்பாக்குடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழ நெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி, அழகாபுரி, புதுப்பட்டி, கல்லணை, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி