Home /madurai /

மதுரையில் நாளை (செப்டம்பர் 22) முக்கிய பகுதிகளில் மின்தடை

மதுரையில் நாளை (செப்டம்பர் 22) முக்கிய பகுதிகளில் மின்தடை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம் பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ( செப்டம்பர் 22) மின் தடை செய்யப்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மாவட்டம் சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம் பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம்சார்பில் அறிவித்துள்ளது. அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Also Read : மதுரைவாசிகளின் ஃபேவரைட் இளநீர் சர்பத்.. இதில் என்ன ஸ்பெஷல்?

    ஆகையால், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரை மாவட்டம் சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம் பட்டி நாளை மின் தடை ஏற்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: குறவன்குளம், முடுவார்பட்டி, ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மலைப்பட்டி, தேசிய சர்க்கரை ஆலை, பண்ணைகுடி, டி.மேட்டுப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்போது பொது மக்களுக்கு சரியாக மின் விநியோகம் செய்ய முடியாது என்றும் மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai, Power cut

    அடுத்த செய்தி