தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டு தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அகழ்வாராய்ச்சிகளில் ஒன்று தான் கீழடி அகழ்வாராய்ச்சி. மாநில அரசு சார்பாக கடந்த 5 வருடமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் பல்வேறு போராட்டங்களை கடந்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று, நம்முடைய சங்க கால மக்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கக் கூடிய வகையில் பல்வேறு வகையான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கி.மு. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்க கால மக்களின் வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துரைக்கக்கூடிய வகையில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதியின் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வியக்க வைக்கும் அளவிற்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.
சங்ககால மக்களின் தொல்லியல் பொருட்களான சிவப்பு நிற பானைகள், தந்தத்தினால் ஆன பகடைகள், மணிகள், தங்க அணிகலன்கள், ஈம தாழிகள், உரை கிணறுகள், செங்கல் கட்டுமானம் போன்ற தொல்லியல் பொருட்களை மக்களின் பார்வைக்காக கடந்த 2 மாதங்களாக இலவசமாக அனுமதித்திருந்தனர்.
இதையும் படிங்க : இனி ஈஸியா வரி செலுத்தலாம்.. நெல்லை மாநகராட்சியில் புதிய வசதி அறிமுகம்!
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த அருங்காட்சியகத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தொல்லியல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அருங்காட்சியகத்தை காண வரும் உள்நாட்டு பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும், மாணவர்களுக்கு 5 ரூபாயும், வெளிநாட்டுப் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 30 ரூபாயும், புகைப்படம் எடுப்பதற்கு 30 ரூபாயும், ஒளிப்பதிவு செய்வதற்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கீழடி அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரையில் திறந்திருக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் கீழடி அருங்காட்சியகத்தில் சங்ககால மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கக் கூடிய வகையிலையும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களை பற்றியும் அறிந்து கொள்ள குறும்படம் ஒன்றை தயார் செய்து அதனை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் குறும்படம் ஒளிபரப்பு செய்யப்படும் நேரங்களையும் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,கீழடி அருங்காட்சியரத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் ஒளிபரப்பப்படும் குறும்படம் காலை 10மணியில்இருந்து மதியம் 1 மணி வரையிலும் உணவு இடைவேளைக்குப் பிறகு 2மணி அளவில் இருந்து மாலை 6மணி வரையும் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Keeladi, Local News, Madurai