என்னதான் டெக்னாலஜி டெவெலப் ஆகி இருந்தாலும் நம்மில் சில பேர் பழமையான பொருட்களில் ரொம்பவே ஆர்வமாக இருக்கும். அதுவும் அந்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது நாம் பயன்படுத்திய இங்க் பேனாவை எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருப்போம். அதுவே இப்போ உள்ள காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் எல்லாம் ஒரு இங்க் பேனா வாங்கி பயன்படுத்தினால் அது சரியாக இல்லை என்றால் அதனை தூக்கிப்போட்டு விட்டு வேறு பேனா வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு காலகட்டம் மாறிப் போய்விட்டது.
ஆனால் தற்பொழுது வரை மீனாட்சி அம்மன் கோவில் நவீன் பேக்கரி அருகில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக சீனிவாசன் என்ற தாத்தா இங்கு பேனா சர்வீஸ் இல் இருந்து வெரைட்டியான இன்க் பேனா வெளிநாட்டு இங்கு பேனாவை எல்லாம் ஒரு ட்ரங்க் பெட்டியில் வைத்து க் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்திலும் இங்க் பேனாவை எல்லாம் சர்வீஸ் பண்ணி தராரா? எந்த மாதிரியான இங்கு பேனாவை எல்லாம் வைத்திருக்கிறார் என்று தெரிஞ்சிக்க அவர்கிட்டயே பேச தொடங்கினோம்.
என் பெயர் சீனிவாசன் 50 வருடங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவீன் பேக்கரி அருகேபேனா சர்வீஸ் மற்றும் பலவகை வகையான பேனாக்கள் விற்பனை செய்யும் கடைநடத்தி வருகின்றேன். என்னுடைய அப்பாவின் மூலமாகத்தான் இந்த தொழிலை கற்றுக்கொண்டு தற்பொழுது செய்து வருகின்றேன்.இப்பொழுது எல்லாம் தொழில் குறைவுதான்,ஏனென்றால் யூஸ் அண்ட் த்ரோ பேனா வெல்லாம் வந்துவிட்டது. பள்ளிக்கூட குழந்தைகள் தான் வருவார்கள் தற்பொழுது விடுமுறை என்பதால் ஜூன் மாதத்தில்தான் போதியவிற்பனை இருக்கும்.
எல்லா வகையான பேனாக்களை சர்வீஸ் செய்வேன் அதாவது பார்க்கர் பேனா, ஜப்பான் பேனா, ஜெர்மன் பேனா, அமெரிக்கன் பார்க்கர் பேனா, சி 4 பேனா ஸ்வான் பேனா, வாட்டர் மேன் போன்ற பலவிதமான பேனாக்களை சர்வீஸ் செய்தும் விற்பனைக்காகவும் வைத்திருக்கின்றேன்.
தற்பொழுது பழைய வாடிக்கையாளர்கள் வருவதில்லை இதனால் விலை உயர்ந்த பேனாக்களை வாங்குவதற்கு ஆளும் இல்லை. வயது முப்பு காரணமாக தற்பொழுது பழைய வாடிக்கையாளர்கள் எல்லாம் வருவதில்லை என்பதால் வியாபாரம் சற்று குறைவாகத்தான் இருக்கின்றது. தற்பொழுது தான் ஒரு 10 பேனாக்கள் சர்வீஸ் காக வந்துள்ளன,அதாவது நிப்பை சரி செய்து இங்க் கசிவை சரி செய்ய போன்ற சர்வீஸுக்காக பேனாக்கள் வரும் அதனை சரி செய்து கொடுத்து வருகின்றேன் என்றார்.
அதிகமான ஆட்கள் வராத நிலையில் இத்தொழிலை ஏன் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது,நான் வெறும் எட்டாம் வகுப்பு தான் படித்திருக்கின்றேன். வேற தொழில் எதுவும் தெரியாது. தெரிந்தாலும் பெரிதாக செய்வதற்கு வருமானமும் கிடையாது. மாதம் 5000 ரூபாய் வருமானம் வருகின்றது. தற்பொழுது வயசாகி விட்டது ஆகையால் இருக்கிற வரைக்கும் இந்த தொழிலை பார்த்துக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டு வருகின்றேன்.
ALSO READ | மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில் இயக்கம்!
காலையில் 9:00 மணியில் இருந்து மாலை 7 மணி வரை இயங்கும் என் கடையில் எந்தவிதமான இங்க் பேனாக்களை கேட்டாலும் நான்கு நாட்களுக்குள் வாங்கித் தந்து விடுவேன் என்றார். தனியாக தனக்குத் தெரிந்த தொழிலை செய்து உழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சீனிவாசன் தாத்தாவின் கதையை கேட்டு முடித்துவிட்டு அவரிடம் இருந்து இங்க் பேனாக்களை வாங்கிக் கொண்டு கடந்து சென்றோம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai