மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களான தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற தென் மாவட்டங்களில் இருந்து சரக்கோ அல்லது பொருட்களோ வாங்க வேண்டும் என்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மதுரைக்கு வந்து தான் பொருட்களை வாங்கிவிட்டு செல்லுவார்கள்.
இதுனாலயே மதுரையில் ஒவ்வொரு பொருட்களை வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு இடம் இருக்கின்றது. அதாவது பலசரக்கு துணிக்கடை போன்ற பொருட்களை வாங்குவதற்கு ஒவ்வொரு இடங்கள் இருப்பது போன்று மூங்கில் போன்ற பொருட்களை வாங்குவதற்கு மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் மூங்கில் கடை தெரு ஒன்று உள்ளது. கடந்த 50 வருடங்களாக இப்பகுதியில் இந்த மூங்கில் கடைகள் செயல்படுத்தப்பட்டு வருவதால் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தலைமுறை தலைமுறையாக மூங்கில் கடைகளை நடத்தி வருகின்றார்கள்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்பு இந்த தெருவில் மண்டகப்படிகள் தான் இருந்ததாகவும் பின்பு காலப்போக்கில் தான் ஒவ்வொரு மண்டகபடியும் ஒவ்வொரு கடைகளாக மாறிவிட்டதாம். இங்குள்ள ஒவ்வொரு மண்டகப்படியிலேயும் அந்த காலத்தில் இருந்து தற்போது வரைக்கும் சித்திரை திருவிழாவிற்காக அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு வரும் கள்ளழகர் ஒவ்வொரு மண்டகப்படிகளையும் தரிசனம் செய்துவிட்டு வருவார் அந்த வகையில் இங்குள்ள ஒவ்வொரு மண்டகப்படியையும் தரிசனம் செய்த பின்பு தான் ஆற்றில் இறங்கச் செல்வாராம்.
இது குறித்து அங்குள்ள மூங்கில் கடை வியாபாரி அனீஸ் குமார் கூறும் போது, நாங்கள் இங்கு 40 வருடங்களாக மூங்கில் கடை வைத்திருக்கின்றோம் இங்குள்ள மூங்கில் கடைகள் அனைத்தும் முதலில் கீழமாசி வீதியில் இருந்தது பின்பு இட பற்றாக்குறை காரணமாகத்தான் இங்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. அங்குள்ள கடைகள் அனைத்தும் ஒவ்வொரு மண்டகப்படி, சித்திரை திருவிழாவிற்காக அனைவரும் எங்கள் கடை அல்லது அதாவது மண்டகப்படிக்கு வரும்பொழுது திருமண மண்டபம் போல் அலங்கரித்து அழகரை வரவேற்பதை வழக்கமாக செய்து வருகின்றோம்.
இங்குள்ள மூங்கில் அனைத்தும் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது இதுபோக சவுக்கு பிரம்பு போன்ற மரங்கள் அனைத்தும் திருப்பூர் பண்ருட்டி விருத்தாச்சலம் போன்ற பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் உசிலம்பட்டி திருமங்கலம் சோழவந்தான் போன்ற கிராமங்களில் நடைபெறும் திருவிழா, கல்யாணத்திற்கு பந்தல் போடுவதற்கும் கோழி பண்ணை மற்றும் குடிசை வீடு போன்றவற்றிற்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தான் விற்பனை செய்யப்படுகின்றது.
இது போக வீடுகளில் இன்டீரியர் டிசைன் செய்வதற்கும், மூங்கில் பொருட்கள், திருவிழாக்களில் மூங்கில் சுவாமி சிலை வடிவமைப்பதற்கும் இங்கிருந்து தான் மூங்கில் கம்புகளை வாங்கிச் செல்வதாகவும் அல்லது இங்குள்ள வியாபாரிகளே இந்தப் பொருட்களை தயார் செய்தும் கொடுக்கின்றார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai