முகப்பு /மதுரை /

268 தூண்கள்.. மதுரை - நத்தம் பயண நேரத்தை குறைக்கும் ரூ.612 கோடி மதிப்பீட்டிலான பிரம்மாண்ட பறக்கும் பாலம்..

268 தூண்கள்.. மதுரை - நத்தம் பயண நேரத்தை குறைக்கும் ரூ.612 கோடி மதிப்பீட்டிலான பிரம்மாண்ட பறக்கும் பாலம்..

X
768

768 தூண்களுடன் பிரமாண்டமாக தயாராகும் பறக்கும் பாலம்

Madurai - Natham New Flyover Bridge | தமிழ்நாட்டிலேயே மிகவும் நீளமான பறக்கும் மேம்பாலமாக மதுரை - நத்தம் இடையே அமைக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடைபெற்ற வருகிறது. அதன்படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டும் வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் நீளமான பறக்கும் மேம்பாலமாக மதுரை - நத்தம் இடையே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் மதுரை - திண்டுக்கல் செல்லும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூபாய் 612 கோடி மதிப்பீட்டில் மதுரை தல்லாக்குளத்தில் இருந்து ஊமச்சிகுளத்தில் உள்ள மாறனை விளக்கு வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பறக்கும் பிரம்மாண்டமான மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மதுரை தல்லாக்குளத்தில் இருந்து 2 வழியாக அதாவது கோரிப்பாளையம், சிம்மக்கல் வழியாகவும், மாட்டுத்தாவணி, அண்ணாநகர் வழியாகவும் நவீன முறையில் இந்த பறக்கும் மேம்பாலம் 150 அடிகள் கொண்ட பிரம்மாண்டமான 268 தூண்களால் கட்டப்பட்டுள்ளது.

மேலும், ஊமச்சிகுளம், திருப்பாலை, ஐயர் பங்களா, நாகனாகுளம் போன்ற பகுதிகளில் பாலத்தின் அடிப்பகுதி அருகில் நடைப்பயிற்சி மேடைகளும், விவசாயி சிலை, குழந்தைகளுக்கென பிரத்தியேகமான பூங்காக்களில் சர்க்கஸ், ஊஞ்சல் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ்பகுதியில் ஒவ்வொரு தூணுக்கு இடையிலும் எல்இடி விளக்குகளும் தூணை சுற்றி 4 திசைகளிலும் சிறிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் தூண்களில் பெயிண்ட்கள் அடிக்கப்படும் மீனாட்சி அம்மன், திருவள்ளுவர் போன்ற ஓவியங்களும் வரையப்பட்டும் சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. பாலத்தின் வேலைகள் பெருமளவில் முடிந்துவிட்ட நிலையில் பாலத்தின் மேல் பகுதியில் மட்டும் சிறு சிறு வேலைகள் இருப்பதால் 2 மாதத்தில் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று மதுரை மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

First published:

Tags: Local News, Madurai