முகப்பு /மதுரை /

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்ற பக்தர்கள்

X
கிரிவலம்

கிரிவலம் சென்ற பக்தர்கள்

Tiruparangunram | மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு மலையை சுற்றி கிரிவலமாக சென்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முப்பத்து முக்கோடி தேவர்களின் அருள் கிடைக்க வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு இரவு வரை கிரிவலமாக சென்றனர்.

மதுரையில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக போற்றக்கூடிய கோவில்தான் திருப்பரங்குன்றம் கோவில். இந்த கோவிலில் தான் முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்ற இடம் என்று புராணங்கள் கூறுகிறது. ஆகையால் இக்கோவிலில் பக்தர்கள் திருமணப் பிரார்த்தனைக்காக அதிகமாக கூடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம்.

கிரிவலம் சென்ற பக்தர்கள்

ஆனால் வைகாசி விசாக பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முப்பது முக்கோடி தேவர்களின் அருளும், குடும்பம் செழிக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு திருமணம் தடை நீங்க வேண்டும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும், நோய்நொடி நீங்கி நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டு பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் ஒரு முறை 2 முறை அல்லது 3 முறை திருப்பரங்குன்றம் மலையை சுற்றி இரவு வரை கிரிவலமாக சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சுமார் 12 மணி அளவில் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு மலையை சுற்றி கிரிவலம் சென்றதால் போலீஸ் தரப்பில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

First published:

Tags: Local News, Madurai, Religion18